ஸ்மார்ட்ஃபோன்களில் தானாகவே பதிவான யுஐடிஏஐ எண்ணை நீக்குவது எப்படி? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, August 5, 2018

ஸ்மார்ட்ஃபோன்களில் தானாகவே பதிவான யுஐடிஏஐ எண்ணை நீக்குவது எப்படி?



உங்களது ஸ்மார்ட்ஃபோன்களில் தானாகவே பதிவான ஆதார் ஆணையத்தின் (யுஐடிஏஐ)  தொலைபேசி எண்ணை நீக்குவது வெகு எளிது. உலக அளவில் மிகவும் பிரபலமான இணையதள தேடுபொறி நிறுவனம் கூகுள்.

பல்வேறு சேவைகளை வழங்கும் கூகுள், ஸ்மார்ட் ஃபோன்களுக்கான ஆன்ட்ராய்டு இயங்குதளத்தை  அளித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் புழக்கத்தில் உள்ள ஸ்மார்ட் ஃபோன்களில் தனிநபர் அடையாள ஆணையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் என்ற 11 இலக்க எண் திடீரென தானாகவே பதிவானது.
இது குறித்து விளக்கமளித்த ஆதார் அடையாள ஆணையம், தங்களது எண் 1947 என்றும், சில விஷமிகள் மக்களைக் குழப்புவதற்காக வேறு ஒரு எண்ணை ஆதார் அடையாள ஆணையத்தின் கட்டணமில்லா எண் என்று பரப்புகின்றனர் என்று கூறியிருந்தது.இந்த தவறுக்கு தாங்கள் காரணம் இல்லை என தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்களும் மறுப்பு தெரிவித்திருந்தன. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நேற்று விளக்கமளித்த கூகுள், இந்தியாவில் தயாரிக்கப்படும் செல்ஃபோன்களுக்காக 2014-ம் ஆண்டு வழங்கிய ஆண்டிராய்டு இயங்குதளத்தில் தவறுதலாக அந்த எண் சேர்க்கப்பட்டதாக தெரிவித்தது. இதனால், பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதற்கு வருந்துவதாக தெரிவித்த கூகுள் நிறுவனம், வாடிக்கையாளர்கள் தாங்களாகவே அந்த எண்ணை அழித்துவிடலாம் என்றும் தெரிவித்தது.எண்ணை நீக்குவது எப்படி?ஸ்மார்ட்ஃபோன்களில் தானாகவே பதிவான யுஐடிஏஐ தொலைபேசி எண்ணை நீக்குவது வெகு எளிதாகும்.ஸ்மார்ட்ஃபோன்களில் கான்டாக்ட்ஸ் பகுதியில் பதிவாகியுள்ள பிற எண்களை வழக்கமாக எவ்வாறு நாம் டெலீட் செய்வோமோ, அதே பாணியில் யுஐடிஏஐ தொலைபேசி எண்ணை டெலீட் செய்ய முடியும். ஒரு நபர் ஒரே கூகுள் அக்கவுண்டின் கீழ் கூடுதல் தொலைபேசிகளையும் இணைத்திருந்தால், அந்த தொலைபேசிகளில் பதிவாகியுள்ள யுஐடிஏஐ தொலைபேசி எண்களையும் டெலீட் செய்ய வேண்டும்.அவை டெலீட் செய்யப்பட்டுவிட்டனவா? என்பதை ஒன்றுக்கு 2 முறை செக் செய்து கொள்ளவும். இவ்வாறு டெலீட் செய்வதால், ஸ்மார்ட்ஃபோன்களில் பதிவாகியுள்ள பிற தகவல்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

Post Top Ad