வடமேற்கு வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்துள்ளது : வானிலை ஆய்வு மையம்! - Asiriyar.Net

Tuesday, August 14, 2018

வடமேற்கு வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்துள்ளது : வானிலை ஆய்வு மையம்!



வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு மத்திய மற்றும் வட வங்கக் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, நெல்லை மாவட்டங்களின் மலைசார்ந்த பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் வால்பாறையில் 18 சென்டிமீட்டரும், சின்னக்கல்லாரில் 17 சென்டிமீட்டரும், நடுவட்டத்தில் 16 சென்டிமீட்டரும், பாபநாசம் மற்றும் வால்பாறை தாலுக்கா அலுவலகத்தில் 9 சென்டிமீட்டரும், தேவாலாவில் 8 சென்டிமீட்டரும், பூதப்பாண்டி மற்றும் பேச்சிப்பாறையில் 6 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளதாக என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Post Top Ad