பேப்பர், புத்தகத்துக்கு இனி பாய்.. பாய்.. லைசென்ஸ், ஆர்சி புக்கை ஸ்மார்ட் கார்டாக பெறலாம் - Asiriyar.Net

Thursday, August 23, 2018

பேப்பர், புத்தகத்துக்கு இனி பாய்.. பாய்.. லைசென்ஸ், ஆர்சி புக்கை ஸ்மார்ட் கார்டாக பெறலாம்பேப்பர், புத்தகத்துக்கு இனி பாய்.. பாய்.. லைசென்ஸ், ஆர்சி புக்கை ஸ்மார்ட் கார்டாக பெறலாம்: செப்டம்பரில் விநியோகம், போக்குவரத்து அதிகாரி தகவல்

சென்னை: தமிழகத்தில் டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புத்தகத்தை திட்டம் வரும் செப்டம்பர் முதல் மீண்டும் அமல்படுத்தப்படவுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.தமிழகம் முழுவதும் 146 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் (ஆர்டிஓ ஆபீஸ்) உள்ளன. இவை அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் பேர் லைசென்ஸ் பெறுகின்றனர். தற்போது உள்ள நடைமுறையால் லைசென்ஸ் பெறுவதற்கு தாமதம் ஆகிறது.

எனவே, லைசென்ஸ் நடைமுறையில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. அந்த வகையில், பொதுமக்கள் எளிதில் கையாளும் வகையிலும், போலியை ஒழிக்கும் வகையிலும் நவீன ஸ்மார்ட் கார்டு வடிவில் லைசென்ஸ் வழங்கும் திட்டம் கடந்த 2008ம் ஆண்டில் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது.
ஆனால், ஸ்மார்ட் கார்டு அச்சிட்டு தரும் தனியார் நிறுவனம் திடீரென பின்வாங்கியதால் முன்னோட்ட திட்டம் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் தற்போது ஸ்மார்ட் கார்டு டிரைவிங் லைசென்ஸ் திட்டம் புத்துயிர் பெறவுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஸ்மார்ட் கார்டு திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வரவுள்ளது. இதற்காக டெண்டர் எடுத்துள்ள நிறுவனம் அனைத்து ஆர்டிஓ அலுவலகங்களிலும் ஒரு அலுவலகம் அமைத்து விண்ணப்பிப்பவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு அச்சிட்டு வழங்குவார்கள். இந்த நவீன ஸ்மார்ட் கார்டு ஏடிஎம் டெபிட், கிரெடிட் கார்டு வடிவில் இருக்கும். வெளிப்புறத்தில் எந்த தகவலும் இருக்காது. கார்டில் எலக்ட்ரானிக் 'சிப்'' பொருத்தப்பட்டிருக்கும். அதனுள் வாகன ஓட்டிகள் மற்றும் வாகனத்தின் அனைத்து விவரங்களும் அடங்கியிருக்கும். இதன் மூலம் பாதுகாப்பான லைசென்ஸ் உறுதி செய்யப்படுகிறது.

முதலில் சென்னை தெற்கு, கடலூர், சிவகங்கை ஆகிய 3 ஆர்டிஓ அலுவலகங்களில் மட்டுமே ஸ்மார் கார்டு வழங்கப்பட்டது. தற்போது தமிழகம் முழுவதும் அனைத்து ஆர்டிஓ அலுவலகங்களிலும் ஸ்மார்ட் கார்டு லைசென்ஸ் வழங்க ஆய்வு பணிகள் நடந்து வருகிறது. வரும் செப்டம்பர் முதல்வாரத்தில் ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணிகள் தொடங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Post Top Ad