இன்ஜி., கவுன்சிலிங் நிறைவு : 98 ஆயிரம் இடங்கள் காலி - Asiriyar.Net

Monday, August 20, 2018

இன்ஜி., கவுன்சிலிங் நிறைவு : 98 ஆயிரம் இடங்கள் காலி
அண்ணா பல்கலை, 'ஆன்லைன்' வாயிலாக நடத்திய, இன்ஜினியரிங் கவுன்சிலிங் முடிந்தது. அண்ணா பல்கலை இணைப்பு கல்லுாரிகளில், இன்ஜினியரிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கை, இதுவரை, ஒற்றை சாளர கவுன்சிலிங்காக நடத்தப்பட்டு வந்தது.
இந்த ஆண்டு முதல், ஆன்லைன் கவுன்சிலிங்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. மருத்துவ சேர்க்கைக்கான, நீட் தேர்வு பிரச்னையால், ஒரு மாதம் தாமதமாக, ஜூலை, 21ல், இன்ஜி., கவுன்சிலிங் துவங்கியது. மொத்தம், 509 இன்ஜி.,கல்லுாரிகளில் உள்ள, 1.72 லட்சம் இடங்களுக்கு, 1.59 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.
இதில், தொழிற்கல்வி, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் மற்றும் விளையாட்டு பிரிவினருக்கான, ஒற்றைச்சாளர முறை கவுன்சிலிங்கில், 1,755 இடங்கள் நிரம்பின. பின், பொதுபிரிவினருக்கு, ஒரு லட்சத்து, 70 ஆயிரத்து, 588 இடங்களுக்கு, ஐந்து சுற்றுகளாக கவுன்சிலிங் நடந்தது.ஐந்தாவது சுற்று நேற்று முடிந்தது. இதில், 20 ஆயிரத்து, 618 பேர் ஒதுக்கீடு பெற்றனர். ஐந்து சுற்றுகளிலும் சேர்த்து, 72 ஆயிரத்து, 608 பேர், இந்த ஆண்டு சேர்க்கை பெற்றுள்ளனர்.
முடிவில், 97 ஆயிரத்து, 980 இடங்கள் மாணவர்கள் சேர்க்கையின்றி காலியாகியுள்ளதாக, அண்ணா பல்கலையின் மாணவர் சேர்க்கைகமிட்டி அறிவித்துள்ளது.கடந்த ஆண்டு, 86 ஆயிரத்து, 355 பேர், இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்த நிலையில்,இந்த ஆண்டு, 14 ஆயிரம் பேர் குறைவாகவே, இன்ஜி., படிப்பில் சேர்ந்துள்ளனர்.

Post Top Ad