சுதந்திர தின சலுகை: ரூ.44,990-மதிப்புள்ள விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போனை ரூ.1947-க்கு வாங்குவது எப்படி? - Asiriyar.Net

Tuesday, August 7, 2018

சுதந்திர தின சலுகை: ரூ.44,990-மதிப்புள்ள விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போனை ரூ.1947-க்கு வாங்குவது எப்படி?


இந்தியாவிற்கு சுந்தந்திரம் கிடைத்தது நமக்கு எவ்வளவு ஆனந்தமோ அதை விட ஆனந்தமாய் இருக்கிறது விவோ நிறுவனம்.

இந்தியர்களுக்குச் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு தீனி போடும் விதமாக விவோ நிறுவவனம் அறிவித்திருக்கும் அதிரடி ஆஃபர்களை கேட்டால், நாம் அனைவரும் கொண்டாட்டத்தின் உச்சிக்கே சென்று விடுவோம்.
விவோ வின் புதிய விவோ நெக்ஸ் பாப் அப் செல்ஃபி கேமராவுடன் கூடிய ஸ்னாப்டிராகன் 845 SoC ஸ்மார்ட்போன் வெறும் ரூ.1947 க்கு விற்பனை செய்ய போகிறது என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறது விவோ நிறுவனம்.
இந்தச் சுதந்திர தின விற்பனையில் விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போன் எப்படி ரூ.1947 வாங்குவது என்று பார்க்கலாம்.
  


புதிய பிரீமியம் விவோ நெக்ஸ்
சீனா நிறுவனமான விவோ, தனது புதிய பிரீமியம் விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போன் ஐ இந்திய சந்தைக்கு அறிமுகம் செய்தது. இதன் வடிவமைப்பு மற்றும் இதன் தோற்றம் மக்களை அதன் பக்கம் திரும்ப செய்திருக்கிறது. விவோ வின் இந்த புது விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போன் இன் விலை ரூ.44,990 ஆகும். இந்த புதிய பிரீமியம் ஸ்மார்ட்போன், உங்களுக்கு முதல் 72 மணிநேர சுதந்திர தின விற்பனையில் வெறும் ரூ.1947 க்கு கிடைக்குமென்று அறிவித்திருக்கிறது விவோ.
  
ரூ.4000 வரை கேஷ் பேக் ஆஃபர்
இந்திய சுதந்திரம் அடைந்த 1947 வருடத்தைத் தனது புதிய ஸ்மார்ட்போன் விலையாக நிர்ணயம் செய்துள்ளது விவோ நிறுவனம். இந்த மூன்று நாள் விற்பனையின் பொழுது அனைத்து டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைக்கு ரூ.4000 வரை கேஷ் பேக் ஆஃபர் வழங்கப்படுகிறது. இத்துடன் இன்னும் கூடுதலாக 12 மாத வட்டி இல்லா கடன் வசதியுடன், இலவசமாக ரூ.1200 மதிப்பிலான ப்ளூடூத் இயர்போன்ஸ் ஒன்றை நீங்கள் பெறலாம். இந்த ஆஃபர்கள் விவோ வின் விவோ நெக்ஸ், விவோ எக்ஸ்21 மற்றும் விவோ வி9 ஸ்மார்ட்போன்களுக்கு மட்டும் பொருந்தும்.

எப்படி விவோ நெக்ஸ் சுமார்போன் ஐ ரூ.1947 க்கு வாங்கலாம்?
விவோ நெக்ஸ் மற்றும் விவோ வி9 இன்று முதல் ஆகஸ்ட் 9 வரை தனது அதிரடி விற்பனையைத் தொடங்கியுள்ளது. குறைந்த அளவிலான ஸ்டாக்கல் மற்றுமே இருப்பதனால் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் சீக்கிரம் முந்துங்கள்.


செயல்முறை 1: shop.vivo.com/in இல் உங்கள் அக்கௌன்ட் சைன் இன் செய்யுங்கள்.
செயல்முறை 2: உங்கள் விலாசம் மற்றும் விவரங்களை நிரப்பிக்கொள்ளுங்கள்.
செயல்முறை 3: உங்களுக்குப் பிடித்த விவோ ஸ்மார்ட்போன் ஐ கார்ட் இல் ஆட் செய்து பிளேஸ் ஆர்டர் கிளிக் செய்யுங்கள்.
செயல்முறை 4: டெலிவரி விலாசத்தை செலக்ட் செயுங்கள்.
செயல்முறை 5: ஏதேனும் கட்டணமுறையை தேர்வு செய்யுங்கள்.
இனி அந்த ஸ்மார்ட்போன் உங்களைத் தேடி வீடு வந்து சேரும்.
  

வெறும் ரூ.72 க்கு சுதந்திர தின விற்பனை
ஆகஸ்ட் 15, 2018 அன்று தனது 72வது சுதந்திர தினத்தை இந்தியா கொண்டாடுகிறது. இதன் அடிப்படையில் விவோ துணைக்கருவிகள் மற்றும் யூஎஸ்பி கேபிள்கள் வெறும் ரூ.72 க்கு சுதந்திர தின விற்பனையின் பொழுது வாங்கலாம் என்றும் விவோ நிறுவனம் அறிவித்துள்ளது. இன்றில் இருந்து தினமும் 3 நாட்கள் மதியம் 12 மணிக்குத் தனது விற்பனையைத் தொடங்குகிறது விவோ. ஸ்டாக் இருக்கும் வரை விற்பனை மூடப்பட்டது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Post Top Ad