தொலைநிலை படிப்புகளை நடத்த 2 பல்கலைக்கு மட்டும் அங்கீகாரம் - Asiriyar.Net

Tuesday, August 14, 2018

தொலைநிலை படிப்புகளை நடத்த 2 பல்கலைக்கு மட்டும் அங்கீகாரம்

தமிழகத்தில், சென்னை மற்றும் அண்ணா பல்கலைகள் மட்டும், தொலைநிலை கல்வியில், படிப்புகளை நடத்த, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதேநேரத்தில், சான்றிதழ் மற்றும் டிப்ளமா படிப்புக்கு அனுமதி தரப்படவில்லை.தொலைநிலை கல்வியில் பல்வேறு மாற்றங்களை, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, பல்கலை கழக மானிய குழுவான, யு.ஜி.சி., அமல்படுத்தி வருகிறது.

பரிசீலனைஇதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் தொலை நிலை கல்விக்கு அங்கீகாரம் வழங்கப்பட்ட பல்கலைகளின் பட்டியலை, யு.ஜி.சி., வெளியிட்டு உள்ளது. இதன்படி, சென்னை பல்கலை மற்றும் அண்ணா பல்கலைக்கு மட்டும், அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையின் அங்கீகார விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளது. 


அனைத்து பல்கலைகளுக்கும், சான்றிதழ் மற்றும் டிப்ளமா படிப்புகளுக்கு அனுமதி வழங்கப் படவில்லை.அதேபோல, எம்.பி.ஏ., - எம்.சி.ஏ.,- பி.எட்., - எம்.எட்., படிப்புகளுக்கு, தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலான, என்.சி.டி.இ.,யின் அங்கீகாரம் பெற்றால் மட்டுமே, அனுமதி தரப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலையை பொறுத்த வரை, பி.ஏ., - எம்.ஏ., பொது நிர்வாகம், எம்.ஏ., அரசியல் அறிவியல் ஆகிய படிப்புகளுக்கும், அண்ணா பல்கலையில், எம்.எஸ்சி., கணினி அறிவியல் படிப்புக்கு மட்டும், அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.அதிர்ச்சிஅண்ணாமலை பல்கலை, அழகப்பா, பாரதியார், மதுரை காமராஜர், பெரியார், திருவள்ளுவர், பாரதிதாசன், மனோன்மணியம் சுந்தரனார் உட்பட, 10 பல்கலைகளின் பெயர்கள், அங்கீகார பட்டியலில் இல்லை. இதனால், பல்கலை நிர்வாகங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

Post Top Ad