வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு : 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு ! - Asiriyar.Net

Monday, August 13, 2018

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு : 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு !




வடமேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் அறிவித்துள்ளார்.
இதனால் நீலகிரி, தேனி, கோவை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தில் பிற பகுதிகளில் வெப்பசலனம் காரணமாக மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.

வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். மேலும் சென்னையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பொள்ளாச்சி 10 செமீ, சின்னக்கல்லார் - 9 செமீ, வால்பாறை - 8 செமீ மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு அறிவுறுத்தல்
வடக்கு மற்றும் மத்திய வங்க கடல் பகுதிக்கும், அந்தமான் கடல் பகுதிக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கேரளத்தில் இன்னும் மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Post Top Ad