வரலாற்றில் இன்று 23-08-2018 - Asiriyar.Net

Thursday, August 23, 2018

வரலாற்றில் இன்று 23-08-2018


ஆகஸ்ட்23 (August 23) கிரிகோரியன் ஆண்டின் 235 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 236 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 130 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள் 

கிமு 30 – எகிப்தை வெற்றிகரமாக வெற்றிகரமாகக் கைப்பற்றிய உரோமைப் பேரரசர் அகஸ்டசு மார்க் அந்தோனியின் மகன் அந்திலசு, கடைசித் தாலமைக்குப் பேரரசரும், யூலியசு சீசர், ஏழாம் கிளியோபாற்றா ஆகியோரின் ஒரே மகனுமான சிசேரியன் ஆகீயோரைக் கொன்றார்.
79 – நெருப்புக்கான உரோமைக் கடவுள் வல்கனின் பண்டிகை நாளில் விசுவியசு மலை வெடித்தது.
406 – புளோரன்சு முற்றுகையின் போது கோத்திக்கு மன்னர் ரடகைசசு உரோமைத் தளபதியினால் கொல்லப்பட்டார். 12,000 "காட்டுமிராண்டிகள் உரோமை இராணுவத்தினரால் கொல்லப்பட்டார்கள் அல்லது அடிமைகளாக விற்கப்பட்டார்கள்.
634 – அபூபக்கர் மதீனாவில் இறந்தார். முதலாம் உமறு ராசிதீன் கலீபாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1244 – எருசலேம் முற்றுகை (1244): எருசலேமின் அரணான தாவீதின் கோபுரம் குவாரெசுமியான் பேரரசிடம் வீழ்ந்தது.
1305 – இசுக்காட்லாந்தின் நாட்டுப்பற்றாளர் சேர் வில்லியம் வேலசு இங்கிலாந்தின் முதலாம் எட்வர்டு மன்னரால் நாட்டுத்துரோத்துக்காகக் குற்றம் சாட்டப்பட்டு இலண்டனில் தூக்கிலிடப்பட்டார்.
1328 – பிளம்மிய விவசாயிகளின் கிளர்ச்சியை பிரெஞ்சுப் படைகள் அடக்கின.
1382 – தோக்தமிசின் தலைமையில் தங்க நாடோடிக் கூட்டம் மாஸ்கோ நகரை முற்றுகையிட்டது.
1521 – டென்மார்க்கின் இரண்டாம் கிறித்தியான் சுவீடன் மன்னர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். முதலாம் குசுத்தாவ் அரசப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.
1541 – பிரெஞ்சு நாடுகாண் பயணி இழ்சாக் கார்ட்டியே கனடாவுக்கான தனது மூன்றாவது பயணத்தில் கியூபெக் நகருக்குக் கிட்டவாகத் தரையிறங்கினார்.
1595 – நீண்ட துருக்கியப் போர்: வலாச்சிய இளவரசர் மைக்கேல் உதுமானிய இராணுவத்தை காலுகாரனி சமரில் சந்தித்து வெற்றி பெற்றார்.

1614 – யூதர்கள் பிராங்க்ஃபுர்ட்டில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
1628 – முதலாம் பக்கிங்காம் கோமகன், ஜார்ஜ் வில்லியர்சு ஜோன் பெல்ட்டன் என்பவனால் படுகொலை செய்யப்பட்டார்.
1655 – சொபோட்டா போரில் சுவீடன் பேரரசு போலந்து-லித்துவேனியாவை வென்றது.
1703 – சுல்தான் இரண்டாம் முஸ்தபா உதுமானியப் பேரரசர் பதவியில் இருந்து கலைக்கப்பட்டார்.
1784 – மேற்கு வட கரொலைனா (தற்போது கிழக்கு டென்னசி) பிராங்கிளின் என்ற பெயரில் தனி நாடாக அறிவித்தது. இது ஐக்கிய அமெரிக்காவால் ஏற்கப்படவில்லை. இந்நாடு 4 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது.
1799 – முதலாம் நெப்போலியன் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் எகிப்தில் இருந்து பிரான்சு நோக்கிப் பயணமானான்.
1831 – நாட் டர்னர் தலைமையிலான அடிமைகளின் கிளர்ச்சி முறியடிக்கப்பட்டது.
1839 – கிங் சீனர்களுடன் போரிடுவதற்காக ஐக்கிய இராச்சியம் ஆங்காங்கைக் கைப்பற்றியது. இது பின்னர் முதலாம் அபினிப் போர் என அழைக்கப்பட்டது.
1866 – பிராகா உடன்பாட்டை அடுத்து ஆஸ்திரியா-புருசியப் போர் முடிவுக்கு வந்தது.
1914 – முதலாம் உலகப் போர்: சப்பான் செருமனியுடன் போரை அறிவித்தது.
1921 – பிரித்தானிய வான்படைக் கப்பல் ஆர்-38 இங்கிலாந்தில் மூழ்கியதில் 49 பிரித்தானிய, அமெரிக்கப் படையினரில், நால்வர் மட்டுமே உயிர் தப்பினர்.
1929 – பாலத்தீனத்தில் எபிரோன் நகரில் அரபுக்கள் யூதர்களைத் தாக்கி அவர்களில் 65 பேரைக் கொன்றனர். ஏனையோர் நகரில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
1939 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி செருமனியும் சோவியத் ஒன்றியமும் போர் தவிர்ப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. பால்ட்டிக் நாடுகள், பின்லாந்து, உருமேனியா, போலந்து ஆகியவற்றை தமக்கிடையே பகிர்வது என்றும் இரகசிய முடிவெடுக்கப்பட்டது.
1942 – இரண்டாம் உலகப் போர்: சுடாலின்கிராட் சண்டை ஆரம்பமானது
1943 – இரண்டாம் உலகப் போர்: கார்கீவ் விடுவிக்கப்பட்டது.
1944 – இரண்டாம் உலகப் போர்: மர்சேய் கூட்டுப் படைகளினால் விடுவிக்கப்பட்டது.
1944 – இரண்டாம் உலகப் போர்: உருமேனியா மன்னர் மைக்கேல் நாட்சி-ஆதரவு அரசை ஏற்க மறுத்தார். அரசுத்தலைவர் இயோன் அந்தனெசுக்கு கைது செய்யப்பட்டார். உருமேனியா கூட்டுப் படைகளுக்கு ஆதரவளிக்க ஆரம்பித்தது.
1944 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்காவின் போர் விமானம் ஒன்று இங்கிலாந்தில் பிரெக்கில்டன் என்ற இடத்தில் உள்ள பாடசாலை மீது மோதியதில் 61 பேர் கொல்லப்பட்டனர்.
1948 – 44 நாடுகளில் இருந்து 147 திருச்சபைகள் இணைந்து "திருச்சபைகளின் உலகப் பேரவை" என்ற அமைப்பு நிறுவப்பட்டது.
1948 – ஏ. கே. செட்டியார் தயாரித்த காந்தி பற்றிய முதல் வரலாற்றுத் திரைப்படம் தமிழிலும் தெலுங்கிலும் வெளியிடப்பட்டன.
1966 – "லூனார் ஆர்பிட்டர் 1" விண்கலம் முதல் தடவையாக நிலாவி சுற்றுவட்டத்திருந்து பூமியைப் படம் பிடித்தது.
1973 – சுவீடன், ஸ்டாக்ஹோம் நகரில் இடம்பெற்ற வங்கிக் கொள்ளை ஒன்று பணயக் கைதிகள் விவகாரமாக உருவெடுத்தது. அடுத்த ஐந்து நாட்களில் பணயக் கைதிகள் கொள்ளைக்காரர்களுக்குப் பரிவு காட்ட ஆரம்பித்தனர். இது "இசுட்டாக்குஃகோம் நோய்க்கூட்டறிகுறி" என்ற சொற்றொடரை உருவாக்கியது.
1989 – பாடல் புரட்சி: எசுத்தோனியா, லாத்வியா லித்துவேனியாவைச் சேர்ந்த இரண்டு மில்லியன் மக்கள் வில்னியஸ்–தாலின் நெடுஞ்சாலையில் கைகோர்த்து பாடல்கள் பாடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1990 – ஆர்மீனியா சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1990 – ஆர்மேனியா சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலை பெற்றது.
1990 – மேற்கு, மற்றும் கிழக்கு செருமனி ஆகியன அக்டோபர் 3-இல் இணையவிருப்பதாக அறிவித்தன.
1991 – உலகளாவிய வலை பொது மக்களுக்காகத் திறந்துவிடப்பட்டது.
2000 – கல்ஃப் ஏர் விமானம் பாரசீக வளைகுடாவின் மனாமா அருகே வீழ்ந்ததில் 143 பேர் உயிரிழந்தனர்.
2006 – நியூசிலாந்தின் ஆளுநராக ஆனந்த் சத்தியானந்த் பதவியேற்றார்.
2007 – 1918 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்ட உருசியப் பேரரசின் கடைசி அரச குடும்பத்தினரான இளவரசர் அலெக்சி, இளவரசி அனஸ்தாசியா ஆகியோரின் எச்சங்கள் உருசியாவின் எக்கத்தரீன்பூர்க் நகரில் கண்டுபிடிக்கப்பட்டன.
2011 – லிபிய உள்நாட்டுப் போர்: லிபியத் தலைவர் முஅம்மர் அல் கதாஃபி அரசுத்தலைவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். தேசிய இடைக்காலப் பேரவை ஆட்சியைக் கைப்பற்றியது.
2013 – பொலிவியாவில் சான்ட்டா குரூசு டெ லா சியேறா நகரில் இடம்பெற்ற சிறைக் கைதிகளின் கலவரத்தில் 31 பேர் உயிரிழந்தனர்.


பிறப்புகள்

1740 – ஆறாம் இவான், உருசியப் பேரரசர் (இ. 1764)
1754 – பிரான்சின் பதினாறாம் லூயி (இ. 1793)
1766 – ஒப்மான்செக், செருமானியத் தாவரவியலாளர் இ. 1849
1847 – சாரா பிரான்சிசு வைட்டிங், அமெரிக்க இயற்பியலாளர், வானியலாளர் (இ. 1927)
1872 – த. பிரகாசம், ஆந்திராவின் 1வது முதலமைச்சர் (இ. 1957)
1896 – ம. இரா. சம்புநாதன், வடமொழி மறைகள் நான்கையும் தமிழில் மொழிபெயர்த்தவர் (இ. 1974)
1914 – டி. எஸ். பாலையா, தமிழ்த் திரைப்பட நடிகர் (இ. 1972)
1918 – அன்னா மாணி, இந்திய இயற்பியலாளர் (இ. 2001)
1919 – சுசுமு ஓனோ, சப்பானியத் தமிழறிஞர் (இ. 2008)
1923 – பல்ராம் சாக்கர், இந்திய அரசியல்வாதி (இ. 2016)
1940 – தாமஸ் ஸ்டைட்ஸ், அமெரிக்க உயிரியற்பியலாளர்
1946 – இரா. வை. கனகரத்தினம், இலங்கைத் தமிழ் பேராசிரியர், ஆய்வாளர், எழுத்தாளர் (இ. 2016)
1950 – ரோசா ஒட்டுன்பாயெவா, கிர்கித்தான் அரசுத்தலைவர்
1954 – அலிமா யாகோப்பு, சிங்கப்பூரின் 8-வது குடியரசுத் தலைவர்
1956 – மோகன், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
1964 – எஸ். ஏ. ராஜ்குமார், தென்னிந்திய இசையமைப்பாளர்
1974 – கொன்சிட்டாண்ட்டின் நோவோசியெலோவ், நோபல் பரிசு பெற்ற உருசிய-ஆங்கிலேய இயற்பியலாளர்
1974 – ரே பார்க், இசுக்கொட்டிய நடிகர்

இறப்புகள் 


634 – அபூபக்கர், அரேபியக் காலிபா (பி. 573)
1305 – வில்லியம் வேலசு, இசுக்கொட்டிய இராணுவத் தலைவர் (பி. 1272)
1628 – முதலாம் பக்கிங்காம் கோமகன், ஜார்ஜ் வில்லியர்சு (பி. 1592)
1806 – சார்லசு-அகஸ்டின் டெ கூலும், பிரான்சு இயற்பியலாளர் (பி. 1736)
1951 – வ. ரா., தமிழக எழுத்தாளர் (பி. 1889)
1976 – மன்னார்குடி பரமசிவம் பிள்ளை, தமிழக நாதசுவரக் கலைஞர் (பி. 1929)
1984 – ராசிக் பரீத், இலங்கை அரசியல்வாதி (பி. 1893)
2000 – ப. ரங்கராஜன் குமாரமங்கலம் இந்திய அரசியல்வாதி. (பி. 1952)
2010 – இரா. சாரங்கபாணி, தமிழறிஞர் (பி. 1925)
2011 – ஜே. சி. டேனியல், இந்திய இயற்கையியலாளர் (பி. 1927)

சிறப்பு நாள்

அடிமை வணிகத்தையும் அதன் ஒழிப்பையும் நினைவூட்டும் பன்னாட்டு நாள்
இசுட்டாலினிசம் மற்றும் நாட்சியத்தினால் பாதிக்கப்பட்டோர் நினைவு நாள் (ஐரோப்பிய ஒன்றியம்)

Post Top Ad