செப்டம்பர் 12: மூன்று ஐபோன்களை அறிமுகம் செய்யும் ஆப்பிள் நிறுவனம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, August 24, 2018

செப்டம்பர் 12: மூன்று ஐபோன்களை அறிமுகம் செய்யும் ஆப்பிள் நிறுவனம்

ஆப்பிள் நிறுவனம் தற்சமயம் புதிய
அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி வரும் செப்டம்பர் 12-ம் தேதி ஐபோன் 9, ஐபோன் 11 மற்றும் ஐபோன் 11 பிளஸ் உள்ளிட்ட சாதனங்களை அறிமுகப்படுத்தும் என்று தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஐபோன் சாதனங்கள் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும்.

குறிப்பாக செப்டம்பர் 12-ம் தேதி ஐபோன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு செப்டம்பர் 22-ம் தேதி முதல் விற்பனைக்கு விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஐபோன்களின் விலை சற்று உயர்வாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபோன் 9
ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யும் ஐபோன் 9 மாடல் அந்நிறுவனத்தின் என்ட்ரி லெவல் மாடலாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 6.1-இன்ச் டிஸ்பளே, ஃபேஸ் ஐடி போன்ற தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த ஐபோன் 9 மாடல்
வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபோன் 11 மற்றும் ஐபோன் 11 பிளஸ்:
ஐபோன் 11 மற்றும் ஐபோன் 11 பிளஸ் சாதனங்கள் முறையே 5.8-இன்ச் மற்றும் 6.5-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பெற்றள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேமரா
ஐபோன் 11 மற்றும் ஐபோன் 11 பிளஸ் சாதனங்களில் செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் கொண்ட கேமரா அமைப்பு மற்றும்
7nm A11 சிப்செட், புதிய யுஎஸ்பி -சி சார்ஜர் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு ஆப்பிள் நிறுவனம் சார்பில்
வெளவந்த தகவலின் படி 512ஜிபி மெமரி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலை:
ஐபோன் 9, ஐபோன் 11 மற்றும் ஐபோன் 11 பிளஸ் சாதனங்கள் விலை முறையே 899, 949 மற்றும் 999 டாலர்கள் முதல் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆப்பிள் பென்சில் சப்போர்ட் வசதியுடன் இக்கருவிகள் வெளிவரும்

Post Top Ad