பொது தேர்வு - அரசு தேர்வு துறை அறிவித்துள்ள கட்டுப்பாடுகள் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, May 5, 2022

பொது தேர்வு - அரசு தேர்வு துறை அறிவித்துள்ள கட்டுப்பாடுகள்

 




'பொதுத் தேர்வுகளில் வினாத்தாளை, 'லீக்' செய்தால், சம்பந்தப்பட்ட மாணவர்கள் மூன்று ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதிக்கப்படும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.


பொது தேர்வுக்கு, அரசு தேர்வு துறை அறிவித்துள்ள கட்டுப்பாடுகள்:


* தேர்வு மைய வளாகத்துக்குள் மாணவர்கள் மட்டுமின்றி, தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களும் அலைபேசி எடுத்து வரக்கூடாது.


* பிற மாணவர்களை பார்த்து காப்பி அடித்தல்; விடைத்தாள்களை மாற்றிக் கொண்டு எழுதுதல்; 'பிட்' வைத்திருத்தல், தேர்வு அதிகாரியிடம் முறைகேடாக நடத்து கொள்ளுதல், ஆள் மாறாட்டம் செய்தல் போன்றவற்றுக்கு, பல்வேறு தண்டனைகள் வழங்கப்பட்டு, தேர்வு எழுதவும் தடை விதிக்கப்படும்


* தேர்வு அறையில் இருந்தோ, வேறு வழியிலோ வினாத்தாளை வெளியே கசியவிடுவது, பரிமாறிக் கொள்வது போன்ற குற்றங்களில் ஈடுபடும் மாணவர்கள், மூன்று ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதிக்கப்படும்; குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும் பள்ளிகளில் இருந்து கசிந்தால், அந்த பள்ளிகளின் தேர்வு மையங்கள் மற்றும் அங்கீகாரமும் ரத்து செய்யப்படும்


* விடைத்தாளில் தேர்ச்சி மதிப்பெண் வழங்குமாறு எழுதுவது; விடைத்தாள் மதிப்பீட்டாளர்கள் மற்றும் தேர்வு துறைக்கு கடிதம் எழுதுவதும் கூடாது. இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.


Post Top Ad