1 முதல் 9-ம் வகுப்பு வரை பள்ளிக்கு விடுமுறை - Commissioner Letter - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, May 5, 2022

1 முதல் 9-ம் வகுப்பு வரை பள்ளிக்கு விடுமுறை - Commissioner Letter

 


தொடக்க மற்றும் உயர் தொடக்க வகுப்புகளுக்கு விடுமுறை தொடர்பான அறிவிப்பு தமிழ்நாடு பள்ளிக் கல்வி வாரியப் பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அனைத்து வகைப் பள்ளிகளில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்துவதற்கான கால அட்டவணை ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது. 


இந்நிலையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாவதனால் மாணவர்களின் நலன் கருதியும் தேர்வுகளுக்கு சிறந்த முறையில் தயாராவதற்கும் ஏதுவாக இனிவரும் நாட்களில் நடக்க இருக்கும் ஆண்டு இறுதித் தேர்வுகள் அன்று தேர்வு எழுதும் அரைநாள் மட்டும் பள்ளிக்கு வருவர். ஏற்கெனவே அந்தந்த மாவட்டங்களில் 1 முதல் 9 வகுப்புகள் வரை இறுதித் தேர்வுகளுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் அறிவிக்கப்பட்ட நாட்களில் மட்டும் தேர்வுகள் நடைபெறும். பிற நாட்களில் வகுப்புகள் ஏதும் நடைபெறாது. 

இயக்குநர் 

தொடக்கக்கல்வி 

ஆணையர் 

பள்ளிக்கல்வி


Post Top Ad