தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயதில் மீண்டும் மாற்றம்? - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, December 10, 2021

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயதில் மீண்டும் மாற்றம்?

 
தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு சார்ந்த பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவன ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்தது.


கோவிட் பற்றிய அனைத்து லேட்டஸ்ட் அப்டேட்களை இங்கே படியுங்கள்


அதன்பிறகு, கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக நிதிச் சிக்கல் வந்ததால் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59 ஆக உயர்த்தப்படுகிறது என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.


அதனைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா பரவலின் இரண்டாவது அலை தீவிரமடைந்தபோது ஓய்வு பெறும் அரசு ஊழியர்களின் வயது 60 ஆக உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.


இந்த உத்தரவு, தற்போது அரசு பணியில் இருப்போர் மற்றும் 2021 மே 30-ம் தேதி முதல் பணியிலிருந்து ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


இந்நிலையில், திமுக அரசு பொறுப்பேற்றதும் முதல்வர் தனிப்பிரிவுக்கு வந்த மனுக்களின் அடிப்படையில், அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை மீண்டும் 58 ஆக குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம். இதற்கான கோப்புகள் தயாரிக்கப்பட்டு முதல்வரின் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டுள்ளதாம். இந்த உத்தரவு அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் அமல்படுத்த வாய்ப்புள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


இந்த உத்தரவு அமலுக்கு வந்தால், ஆயிரக்கணக்கானோர் உடனடியாக ஓய்வு பெறும் நிலை ஏற்படும். இதனால், ஓய்வூதிய பணப்பலன்கள் உடனடியாக கிடைக்குமா என்றும் கேள்வி எழுந்துள்ளது. இதற்கு, தற்போதைய நிதி நெருக்கடி சூழலில் ஓய்வு பெற்ற உடனே பணப்பலன்கள் வழங்கப்படாது என்றும், அதற்கு பதிலாக அரசு பத்திரம் வழங்க முடிவு செய்து பரிசீலனையில் உள்ளது. இந்த பத்திரத்தை குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பணமாக மாற்றிக் கொள்ளலாம் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Post Top Ad