ரூ10,000 பரிசு - தொடக்க/நடுநிலை/உயர்/மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் போட்டி - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, December 1, 2021

ரூ10,000 பரிசு - தொடக்க/நடுநிலை/உயர்/மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் போட்டி

 


தமிழ் வளர்ச்சி - திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு - 1330 குறட்பாக்களையும் முற்றோதும் மாணவர்களுக்கு ரூ10,000/- பரிசு - தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்க பெறுதல் - பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த போட்டி நடத்துதல் - அனைத்து வகைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தல் சார்பாக. பார்வை : திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்: 322/2021

 


பார்வையில் காணும் மாவட்ட ஆட்சியர் அவர்களின் செயல்முறைகளின்படி திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு போட்டிகள் சார்பாக கடிதம் இவ்வலுவலகத்தில் பெறப்பட்டுள்ளது.

மாணவர்கள் இளம் வயதிலேயே திருக்குறட்பாக்களை மனப்பாடம் செய்தால் அவை பசுமரத்தாணிபோல் பதிந்து, நெஞ்சில் நிலைத்து அவர்களது நல்வாழ்கைக்கு வழிகாட்டும், இளம் வயதில் பெறுகின்றகல்வியாறிவோடு, நல்லொழுக்கம் மிக்கவர்களாக மாணவர்கள் உருவாக வழிவகுக்கும். எனவே, திருக்குறள் முற்றோதல் செய்யும் மாணவச்செல்வங்களுக்கு பரிசு வழங்கிப் பாரட்டுவது, மாணவர்களின் நல்வாழ்விற்கு துணை நிற்பதாகவும், திருக்குறள் நெறி பரவ வழிவகுப்பதாகவும் அமையும், அதனைக் கருத்தில் கொண்டு, 1330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் மாணவர்கள் திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசுத்தொகை ரூ 10,000/-, பாரட்டுச் சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பெறுகின்றனர்.



அரசு | அரசு உதவி பெறும் | சுயநிதி பதின்ம தொடக்க, நடுநிலை/உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு திருக்குறள் முற்றோதல் குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவது அவசியமாகிறது. இத்திட்டம் திறன்மிக்க மாணாக்கர்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் செய்திதாளிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தால் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.


எனவே திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை அரசு அரசுநிதியுதவி சுயநிதி பதின்ம தொடக்க நடுநிலை உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாவர்களில் 1330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் தகுதிபெற்ற மாணவர்களை மட்டும் இப்போட்டிக்கு விண்ணப்பிக்க தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithuraicom என்ற வலைதள முகவரியில் விண்ண ப்பங்களை பதிவிறக்கம் செய்து நிறைவுசெய்யப்பெற்ற விண்ணப்பங்களை 15.12.2021 அன்று பிற்பகல் 05.45 மணிக்குள் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக அ' பிரிவு கட்டிடம் நான்காம் தளத்தில் அமைந்துள்ள தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அளிக்க வேண்டும் (தொலைபேசி எண்: 0416 2256166) என அனைத்து வகைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு தெரிவிக்கலாகிறது.

வட்டாரக்கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் மாணவர்களுக்கும், மாணவர்களின் வழியே பெற்றோருக்கும் இது தொடர்பாக விழிப்புணர்வு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு பெறுவதற்கான விதிமுறைகள்

- 1330 திருக்குறட்பாக்களையும் முழுமையாக ஒப்புவிக்கும் திறன் பெற்றவராக இருத்தல்

வேண்டும். - இயல் எண், பெயர், அதிகாரம் எண், பெயர், குறள் எண், பெயர் போன்றவற்றை

தெரிவித்தல் அதற்குரிய திருக்குறளைக் கூறும் திறன் பெற்றவராக இருத்தல் வேண்டும். திருக்குறளின் அடைமொழிகள், திருவள்ளுவரின் சிறப்புப் பெயர்கள், திருக்குறளின் சிறப்புகள் ஆகியவற்றை அறிந்தவராக இருத்தல் வேண்டும். - திருப்பத்தூர் வருவாய் மாவட்டத்தில் அமைந்துள்ள பள்ளியில் பயில்பவராக இருத்தல் வேண்டும். அரசு அரசு நிதியுதவி சுயநிதி பதின்மப் பள்ளிகள் போன்ற பாளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பங்கு பெறலாம். - தமிழ் வளச்சித்துறையால் வழங்கப் பெறும் இப்பரிசினை ஏற்கனவே பெற்றவராக இருத்தல் கூடாது. - திருக்குறளின் பொருளும் அறிந்திருப்பின் கூடுதல் தகுதியாகக் கருதப்பெறும்.

இணைப்பு:விண்ணப்பம் மற்றும் படிப்புச் சான்று













Post Top Ad