தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு NISHTHA-Online Training - செயல்முறைகள் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, October 1, 2020

தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு NISHTHA-Online Training - செயல்முறைகள்

 


Online course க்காக என்ன செய்யலாம் என்று செய்ய வேண்டும் என்று செயல்முறையில் கூறப்பட்டுள்ளது....

Telegram app download செய்ய வேண்டும்

Diksha app download செய்ய வேண்டும்

Q.R code app download செய்ய வேண்டும்

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்காக நடத்தப்படும் இப்பயிற்சி இந்தாண்டு முதல் அரசு உதவிபெறும் மற்றும் நர்சரி பிரைமரி மெட்ரிக் ஆசிரியர்களுக்கும் தமிழ், ஆங்கிலத்தில் அக்.,15 வரை நடக்கிறது.



* இப்பயிற்சியில் 1 முதல் 8 ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் அனைவரும் கலந்துக்கொள்ள வேண்டும்.


* அரசுப்பள்ளி , அரசு உதவிப்பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சுய உதவிப் பெறும் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும். 


* இப்பயிற்சியில் பங்கேற்க உள்ள ஆசிரியர்கள் Telegramme Group -ல் இணைய வேண்டும்,.



* இப்பயிற்சியில் பங்கேற்க உள்ள ஆசிரியர்கள் DIKSHA app Download செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.


* QRScanner code app Download செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.


* ஆசிரியர்கள் EMIS Teacher ID மற்றும் Password ஐ பயன்படுத்தி NISTHA Online Course -ல் இணைய வேண்டும்.


* மேற்பார்வையாளர்கள் பயிற்சி ஒருங்கிணைப்பாளர்கள் , அரசுப்பள்ளி , அரசு உதவிப்பெறும் பள்ளி ஆசிரியர்களை வட்டார வளமைய அளவில் ஒரு குழுவாக இணைக்க வேண்டும்.


* சுய உதவிப்பெறும் பள்ளி ஆசிரியர்களை வட்டார வளமைய அளவில் ஒரு குழுவாக இணைக்க வேண்டும்.


* ஒவ்வொரு வட்டார வளமைய அளவிலான குழுவிலும் SRG ( சென்ற ஆண்டு NISTHA பயிற்சி வழங்கிய ஆசிரியப்பயிற்றுநர்கள் , DIET விரிவுரையாளர்கள் மற்றும் உயர்நிலை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் இடம்பெற வேண்டும். 




மேற்காணும் பணியினை விரைவாக செய்து முடிக்க அனைத்து வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் ( பொ ) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .





Post Top Ad