சத்துணவுத் திட்ட பணியாளர்கள் தேர்வு நிறுத்திவைப்பு ஏன்? அமைச்சர் வெ.சரோஜா விளக்கம். - Asiriyar.Net

Post Top Ad


Friday, October 9, 2020

சத்துணவுத் திட்ட பணியாளர்கள் தேர்வு நிறுத்திவைப்பு ஏன்? அமைச்சர் வெ.சரோஜா விளக்கம்.

 
கரோனா தொற்று தடுப்பு பணிகள் நடந்து வருவதால் சத்துணவு திட்ட பணியாளர்கள் தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வெ.சரோஜா தெரிவித்தார்.


நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகரில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அமைச்சர் இதனை தெரிவித்தார். தமிழகம் முழுவதும் 5,411 சத்துணவு அமைபப்பாளர்கள், 2,459 சமையலர்கள், 8,326 சமையல் உதவியாளர்கள் காலி பணியிடங்கள் நிரப்பும் பணி மேற்கொள்ள அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதனையடுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் மனுக்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்யும் பணி நடந்து வந்தது. இந்நிலையில், சத்துணவு வேலை வாய்ப்பிற்கு அதிக மனுக்கள் பெறப்பட்டுள்ளது.


இந்நிலையில், தற்போது கரோனா பரவல் அதிக அளவில் உள்ளதால் அதிக கூட்டம் கூடும் வாய்ப்பு உள்ளதை கருத்தில் கொண்டு சத்துணவு பணியாளர்கள் தேர்வு செய்யும் பணியை பொதுமக்கள் நலன் கருதி நிறுத்தி வைக்க அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் வெ.சரோஜா குறிப்பிட்டார்.

Recommend For You

Post Top Ad