உடனடியாக அப்டேட் செய்யுங்கள்" கூகுள் நிறுவனத்தின் எச்சரிக்கை... - Asiriyar.Net

Post Top Ad


Wednesday, February 26, 2020

உடனடியாக அப்டேட் செய்யுங்கள்" கூகுள் நிறுவனத்தின் எச்சரிக்கை...
கூகுள் க்ரோம் பிரவுசரை உடனடியாக அப்டேட் செய்ய வேண்டும் என கூகுள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் தினமும் உபயோகிக்கும் ஒரு செயலி என்றால், அது கூகுள் நிறுவனத்தின் க்ரோம் செயலி எனலாம். இப்படி கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் இந்த பிரவுசரில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு காரணமாக உடனே இதனை அப்டேட் செய்ய வேண்டும் என கூகுள் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.


குறிப்பாக கணினி பயன்படுத்துவோர் உடனடியாக இதனை அப்டேட் செய்ய வேண்டியது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய வெர்ஷன் ஹேக் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் கண்டறியப்பட்டுள்ளதால், பயனாளர்களின் தகவல் பாதுகாப்புக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommend For You

Post Top Ad