ஆஸ்துமா உள்ளவர்கள் சாப்பிட வேண்டியவை எவை ?? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, February 23, 2020

ஆஸ்துமா உள்ளவர்கள் சாப்பிட வேண்டியவை எவை ??






ஆஸ்துமா பெரும்பாலும் ஆண்களுக்கு அதிகமாகவும், பெண்களுக்கு குறைவாகவும் வருகின்றது. ஆஸ்துமா குணமாக உணவு முறைகள் உள்ளன. அரைவயிறு சாப்பாடு, கால் வயிறு தண்ணீர், கால்வயிறு காலியாக காற்று செல்வதற்கு இடமிருக்க வேண்டும். முழுவயிறு சாப்பிட்டால், அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், அதிக பிராணசக்தி ஜீரணமாவதற்கு சென்றுவிடும். எனவே அஜீரணமாகி வயிறு உப்பிசமாகி உடன் மூச்சுத் திணறல் வரும்.சூடான உணவைச் சாப்பிட வேண்டும். குளிர்ந்து சாப்பிட கூடாது. இரவு சூரியன் மறையும்முன் 6.00 மணிக்குள் சாப்பிட்டால் மிகவும் நல்லது. இரவில் தயிர், பால், குளிர்ந்த பானங்கள், கீரை ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். பூண்டு போட்டு அரிசிக் கஞ்சி சாப்பிட வேண்டும்.

பாலில் மிளகு, மஞ்சள் பொடி போட்டு சாப்பிட வேண்டும். தூதுவாளைச் செடி இலைகளை ரசம் வைத்து உணவுடன் உண்ணலாம். மாதுளம் பழச்சாறு, எலுமிச்சைச் சாறு கலந்து குடிக்கலாம். ஏலக்காய் பொடியை நெய்யில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடவும். சளி வெளியேறும். இருமல் இருக்கும் பொழுது எலுமிச்சை சாற்றுடன் தேன் கலந்து சாப்பிடவும். வில்வ இலையுடன் மிளகு சேர்த்து மென்று தண்ணீர் குடிக்கவும்.


Post Top Ad