ஊழியர்களுக்கு புதிய நடைமுறையை கொண்டு வந்த தமிழக அரசு..கவலையில் ஊழியர்கள்.! - Asiriyar.Net

Post Top Ad


Friday, February 21, 2020

ஊழியர்களுக்கு புதிய நடைமுறையை கொண்டு வந்த தமிழக அரசு..கவலையில் ஊழியர்கள்.!
தமிழக பள்ளிக் கல்வித்துறை அலுவலக ஊழியர்களும் பதவி உயர்வின் மூலம் ஆசிரியர் பணி பெறுவதற்கு, இனி டெட் தேர்வின் தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


பள்ளிகல்வித் துறையில் பணியாற்றும் அலுவலக ஊழியர்களுக்கு பதவி உயர்வின் மூலமாக ஆசிரியர் பணி வழங்குவதற்கான தமிழக அரசு செய்த விதிமுறைகளில் திருத்தம் செய்து தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே பிளஸ் 2 முடித்து தொடக்கக்கல்வி பட்டயப்படிப்பு படித்து முடித்த அலுவலக ஊழியர்களுக்கு பதவி உயர்வு மூலம், ஆரம்பப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணி வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இனிமேல் ஆசிரியராக பதவி உயர்வு பெறுவதற்கு, தொடக்கக்கல்வி பட்டயப்படிப்புடன் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித்தேர்விலும் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.Recommend For You

Post Top Ad