பட்டதாரிகளுக்கு மட்டும் தான் ஆசிரியர் நியமனம்! முடிவெடுத்தது அரசாங்கம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, February 11, 2020

பட்டதாரிகளுக்கு மட்டும் தான் ஆசிரியர் நியமனம்! முடிவெடுத்தது அரசாங்கம்






பட்டதாரிகளை மாத்திரமே ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.பட்டதாரிகளுக்கான நியமனங்கள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்களின்படி,ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கமைய இலங்கை கல்வி துறையில் சீர்திருத்தம் செய்யப்படவுள்ளது. இதற்கான அமைச்சரவை அனுமதி பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.அதற்கமைய இலங்கை கல்வித்துறையில் பாரிய புரட்சி ஒன்று ஏற்படவுள்ளது.இலங்கையில் 10 ரக ஆசிரியர்கள் உள்ளனர். உலகில் வளர்ச்சி அடைந்த நாடுகள் மற்றும் கல்வித்துறையில் பட்டதாரிகளை தவிர வேறு எவரையும் ஆசிரியர் துறைக்கு இணைத்துக் கொள்ளப்படுவதில்லை.இலங்கையிலும் 7 வருடங்களின் பின்னர் பட்டதாரிகள் மாத்திரமே ஆசிரியர் துறையில் இணைத்துக்கொள்ளப்படுவர்.


இந்நிலையில் 2027ஆம் ஆண்டில் இருந்து இந்த நடைமுறை அமுலாகும் என்றார்.

Post Top Ad