தேசிய அறிவியல் தினம் 2020 - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, February 28, 2020

தேசிய அறிவியல் தினம் 2020






*_தேசிய அறிவியல் தினம் 2020_*


*கருப்பொருள்:*
*"அறிவியலில் பெண்கள் (Women in science)"*
அறிவியலில் பெண்கள்
என்பது பழங்காலம் முதல் இன்றுவரை அறிவியலில் பெண்கள் ஆற்றியுள்ள பங்கினைக் குறிக்கும். பழங்காலம் முதலே பெண்கள் அறிவியலில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை செய்து வந்துள்ளனர். பாலினம் மற்றும் அறிவியலில் ஆர்வமுள்ள வரலாற்று ஆய்வாளர்கள், அறிவியலில் பெண்களின் சாதனைகள், அதை முடிப்பதற்கான பெருமுயற்சிகள் எனப் பதிவு செய்து வைத்துள்ளனர். தனது சாதனைகளுக்காக அவர்கள் எதிர்கொண்ட தடைகள், அவரகளின் பணிக்காக செயல்படுத்திய உத்திகள், குழு ஆய்வுகள், முக்கிய அறிவியல் இதழ்களிலும் பிற வெளியீடுகளிலும் அங்கீகரிக்கப்பட்டமை ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளன. சமூகம், வரலாறு, விமர்சனம் இவையனைத்தையும் தாண்டி, தன் அறிவுசார் ஒழுக்கத்தை வெளிப்படுத்தி தனது உரிமையை நிலைநாட்டியுள்ளனர்.
*_லாரா பாசி_*, முதல் பெண் அறிவியலாளர்.
முந்தைய பல நாகரிகங்களில் பெண்கள் மருத்துவத்துறையில் ஈடுபட்டிருந்தனர். பண்டைய கிரேக்கத்தில் பெண்களுக்காக இயல் மெய்யியலில் வாய்ப்புகள் இருந்தன. கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் பெண்கள் இரசவாதம் என்னும் துறையில் பங்களித்துள்ளனர். இடைக்காலத்தில் பெண்கள் கல்வி கற்பதற்கான இடமாக அருட்சகோதரி மடங்கள் இருந்தன. இது போன்ற சில சமூகங்களில் பெண்கள் அறிவார்ந்த ஆய்வுப்பணிகளில் ஈடுபட வாய்ப்புகள் வழங்கப்பட்டன. பதினோராம் நூற்றாண்டு இடைக்காலப் பல்கலைக்கழகங்கள் தோற்றம் கண்டபோது, பெரும்பாலான பெண்கள் பல்கலைக்கழகக் கல்வியிலிருந்து விலக்கப்பட்டனர். மருத்துவத்துறையில் பெண்கள் கல்வி கற்பதற்கான சுதந்திரம் மற்ற இடங்களில் இருந்ததைக் காட்டிலும் இத்தாலியில் அதிகமாக இருந்தது. பதினெட்டடாம் நூற்றாண்டில் அறிவியல் துறை ஆய்வுகளில் ஈடுபட்டு பல்கலைக்கழகத் தலைவராக உயர்ந்த முதல் பெண் அறிவியலாளர் லாரா பாசி ஆவார்.இவர் இத்தாலியைச் சேர்ந்த அறிவியலாளர் ஆவார்.

பதினெட்டாம் நூற்றாண்டில் பாலின வரையரைகள் பெரிதாக இருந்த போதும், பெண்கள் அறிவியல் துறையில் மிகப்பெரிய முன்னேற்றம் கண்டனர். தான் வாழும் சமூகத்தில் பெண்களின் சாதனைகள் விலக்கிவைக்கப்பட்ட போதும் படித்த சமூகங்கள் பெண்களை அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளத் தொடக்கின. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின்பகுதியில் மகளிரில் கல்லூரிகள் அதிகரிக்கத் துவங்கின. அதன்மூலம் பெண்களுக்கான கல்வியும் பெண் அறிவியலாளருக்கான வேலை வாய்ப்புகளும் அதிகமாகின. 1903 ஆம் ஆண்டில் *இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண் அறிவியலாளர் மேரி கியூரி* ஆவார். மேலும் 1911 இல் வேதியலில் இவரின் கதிரியக்கம் குறித்த ஆய்வுகளுக்கு நோபல் பரிசு பெற்றார். இரட்டை நோபல் பரிசு பெற்ற முதல் பெண் இவரே ஆவார். *1901 முதல் 2010 வரை நாற்பது பெண்கள் இதுவரை நோபல் பரிசு பெற்றுள்ளனர்.* இவற்றில் பதினேழு பெண்கள் இயற்பியல், வேதியல், மருத்துவம் ஆகிய துறைகளில் நோபல் பரிசு பெற்றுள்ளனர்.

Post Top Ad