மாவட்டங்களில் தேர்வுத்துறைக்கு தனி அலுவலகம் அமைக்க முடிவு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, September 22, 2018

மாவட்டங்களில் தேர்வுத்துறைக்கு தனி அலுவலகம் அமைக்க முடிவு


பொதுத்தேர்வு ஏற்பாடு பணிச்சுமையை குறைக்க, மாவட்டங்களில், தேர்வுத்துறைக்கு தனி அலுவலகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.பொதுத்தேர்வுகளை நடத்த வசதியாக, தமிழகத்தின், 32 மாவட்டங்கள், ஏழு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அரசு தேர்வுகள் இயக்ககம் ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு தேர்வு, பல்வேறு தொழில்நுட்ப தேர்வுகள் உள்ளிட்ட, 22 வகையான தேர்வுகளை நடத்துகிறது.


ஏற்கனவே, 22 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கான தேர்வை, சென்னையை தலைமையாக கொண்டு இயங்கும் தேர்வுகள் இயக்ககம் நடத்தி வருகிறது. கடந்தாண்டில் இருந்து, பிளஸ் 1 பொதுத்தேர்வு என்பதால், மாணவர் எண்ணிக்கை, மேலும் எட்டு லட்சம் உயர்ந்துள்ளது.இதனால், அனைத்து மாவட்டங்களிலும், தேர்வுத்துறை அலுவலகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கல்வித்துறை அலுவலர்கள் கூறுகையில், 'முதன்மை கல்வி அலுவலகத்தில், மாவட்ட தேர்வுத்துறைக்கென தனி அலுவலகம் அமைக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது. காலாண்டு தேர்வு முடிந்த பின், இப்பணிகள் துவங்கும்' என்றனர்.

Post Top Ad