இமாச்சலம் சுற்றுலா சென்ற தமிழக மாணவர்கள், ஆசிரியர்கள் திரும்ப முடியாமல் தவிப்பு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, September 24, 2018

இமாச்சலம் சுற்றுலா சென்ற தமிழக மாணவர்கள், ஆசிரியர்கள் திரும்ப முடியாமல் தவிப்பு




சிம்லா: இமாச்சலப் பிரதேசத்துக்கு சுற்றுலா சென்ற தமிழக மாணவர்கள், ஆசிரியர்கள் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.


ஒசூரைச் சேர்ந்த 22 ஆசிரியர்கள், திருச்சியைச் சேர்ந்த 40 மாணவர்கள் இமாச்சலப் பிரதேசத்துக்கு சுற்றுலா சென்றனர். இந்நிலையில் அங்கு பலத்த மழை பெய்து வருவதால் விடுதி விட்டு வெளிவர முடியாமல் தவித்து வருகின்றனர்.

இமாச்சல பிரதேசத்தில் தொடரும் கனமழை : சுற்றுலாவுக்கு சென்ற தமிழக மாணவர்கள், ஆசிரியர்கள் திரும்ப முடியாமல் தவிப்பு

சிம்லா: இமாச்சலப் பிரதேசத்துக்கு சுற்றுலா சென்ற தமிழக மாணவர்கள், ஆசிரியர்கள் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். ஒசூரைச் சேர்ந்த 22 ஆசிரியர்கள், திருச்சியைச் சேர்ந்த 40 மாணவர்கள் இமாச்சலப் பிரதேசத்துக்கு சுற்றுலா சென்றனர். இந்நிலையில் அங்கு பலத்த மழை பெய்து வருவதால் விடுதி விட்டு வெளிவர முடியாமல் தவித்து வருகின்றனர்.


தொடரும் மழையால் அம்மாநிலத்தின் பல மாவட்டங்கள் வெள்ளம் சூழ்ந்துள்ளது. கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சின்னாவூர், குலூ, கங்காரா மாவட்டங்களில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. கனமழையால் ரவி, பியாஸ் உள்ளிட்ட நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மணாலியில் வெள்ளப் பெருக்கு காரணமாக மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். ஒரு கனரக லாரி மற்றும் சொகுசு பேருந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் வெளியாகி உள்ளது. ஆறுகளில் வெள்ளப் பெருக்கு அதிகரித்த வண்ணம் இருப்பதால் மக்கள் அருகில் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

Post Top Ad