2026 ஆம் ஆண்டு பிறந்துவிட்டது. இந்த ஆண்டு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மிக முக்கியமான ஒரு ஆண்டாக இருக்கவுள்ளது. 8வது ஊதியக்குழுவின் அமலாக்கம், சம்பள உயர்வு, ஓய்வூதிய உயர்வு, படிகள் தொடர்பான பல முக்கிய அப்டேட்களை அவர்கள் இந்த ஆண்டு எதிர்பார்க்கலாம்.
காத்திருகுக்கும் மத்திய அரசு ஊழியர்கள்
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான சம்பளம், படிகள் மற்றும் ஓய்வூதியப் பலன்களை மறுஆய்வு செய்யவுள்ள 8வது மத்திய ஊதியக் குழுவின் பணிக்கான விதிமுறைகளுக்கு (ToR) மத்திய அமைச்சரவை 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் அடிப்படையில் புதிதாக அமைக்கப்பட்ட ஊதியக்குழு தனது பணிகளை தொடங்கியுள்ளது.
Salary Hike: 8வது ஊதியக் குழுவின் கீழ் ஊதிய உயர்வு
8வது ஊதியக் குழுவின் படி தங்களது சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் டிசம்பர் 31 அன்று 10 ஆண்டு காலத்தை நிறைவுசெய்தன. அடுத்து 8வது ஊதியக்குழுபின் கீழ் நிகழவுள்ள மாற்றத்தை காண மத்திய அரசு ஊழியர்கள் தயாராக உள்ளனர். இதன் அமலாக்கத் தேதி ஜனவரி 1, 2026 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் ஜனவரி 2025-ல் 8வது ஊதியக் குழு அறிவித்தது. 8வது ஊதியக் குழுவைப் பொறுத்தவரை, குறைந்தபட்ச சம்பளம் மற்றும் ஃபிட்மென்ட் ஃபாக்டர் ஆகியவை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் மிகப்பெரிய விவாதப் பொருட்களாக உள்ளன.
8வது மத்திய ஊதியக் குழுவிடம் இருந்து ஊழியர்களின் எதிர்பார்ப்புகள்
7வது ஊதியக் குழுவின் பதவிக்காலம் டிசம்பர் 31 அன்று முடிவடைந்தது. இது மத்திய அரசு ஊழியர்களுக்கான நீண்டகால சம்பள மறுசீரமைப்பு காலத்தின் முடிவைக் குறிக்கிறது. ஜனவரி 1, 2016 அன்று நடைமுறைக்கு வந்த 7வது ஊதியக் குழு, ஊழியர்களின் ஊதியக் கட்டமைப்புகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வந்தது. இது 8வது ஊதியக் குழுவிற்கான ஊழியர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.
8வது ஊதியக் குழு: சம்பள உயர்வு எப்படி முடிவு செய்யப்படும்?
8வது ஊதியக் குழுவின் சம்பள உயர்வு, மத்திய ஊதியக் குழு உறுப்பினர்களால் முன்மொழியப்பட்ட ஃபிட்மென்ட் ஃபாக்டர் மற்றும் இன்னும் சில காரணிகளின் அடிப்படையில் தீர்மானிக்கபடும்.
Fitment Factor: ஃபிட்மெண்ட் ஃபாக்டர் என்றால் என்ன?
ஃபிட்மென்ட் ஃபாக்டர் என்பது புதிய அடிப்படை ஊதியத்தைத் தீர்மானிக்க புதிய மத்திய ஊதியக் குழு பயன்படுத்தும் பெருக்கி ஆகும். தற்போதுள்ள அடிப்படை ஊதியம் ஃபிட்மெண்ட் ஃபாக்டரால் பெருக்கப்பட்டு புதிய அடிப்படை ஊதியம் தீர்மானிக்கப்படுகின்றது. 7வது ஊதியக் குழுவில் ஃபிட்மென்ட் காரணி 2.57 ஆக இருந்தது. 8வது ஊதியக்குழுவில் இது 1.83 முதல் 3.00 வரை இருக்கக்கூடும் என்ற ஒரு பரந்த மதிப்பீடு உள்ளது.
8வது ஊதியக் குழு அமைக்கப்பட்ட பிறகு, அனைத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அடிப்படைச் சம்பளம் கணிசமாக உயர வாய்ப்புள்ளது. ஃபிட்மென்ட் காரணிக்கு ஏற்ப அடிப்படைச் சம்பளம் அதிகரிக்கும்.
8வது ஊதியக் குழுவின் சம்பள உயர்வு, ஊழியர்களின் நிலையைப் பொறுத்து ஒவ்வொருவருக்கும் மாறுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ஊழியர்களில் 18 லெவல்கள் உள்ளன:
லெவல் 1: ஆரம்ப நிலை / குரூப் D ஊழியர்கள்
லெவல் 2–9: குரூப் C ஊழியர்கள்
லெவல் 10–12: குரூப் B ஊழியர்கள்
லெவல் 13–18: குரூப் A ஊழியர்கள்
2.15 என்ற அளவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் நிர்ணயிக்கப்படுவது யதார்த்தத்துக்கு ஏற்றதாக இருக்குமென நிபுணர்கள் கருதுகிறார்கள். ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.15 ஆக நிர்ணயிக்கப்பட்டால், அடிப்படைச் சம்பளம் அதற்கேற்ப அதிகரிக்கும்.
ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.15 ஆக இருந்தால், பல்வேறு நிலை ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும் என இங்கே காணலாம்:
நிலை 1: தற்போதைய சம்பளம்: ₹18,000; உயர்த்தப்பட்ட சம்பளம்: ₹38,700 (வித்தியாசம்: ₹20,700)
நிலை 5: தற்போதைய சம்பளம்: ₹29,200; உயர்த்தப்பட்ட சம்பளம்: ₹62,780 (வித்தியாசம்: ₹33,580)
நிலை 10: தற்போதைய சம்பளம்: ₹56,100; உயர்த்தப்பட்ட சம்பளம்: ₹1,20,615 (வித்தியாசம்: ₹64,515)
நிலை 15: தற்போதைய சம்பளம்: ₹1,82,200; உயர்த்தப்பட்ட சம்பளம்: ₹3,91,730 (வித்தியாசம்: ₹2,09,530)
நிலை 18: தற்போதைய சம்பளம்: ₹2,50,000; உயர்த்தப்பட்ட சம்பளம்: ₹5,37,500 (வித்தியாசம்: ₹2,09,530)
8வது ஊதியக்குழு: யாருக்கு அதிக சம்பள உயர்வு கிடைக்கும்?
முழுமையான அளவில் பார்க்கும்போது, கேபினட் செயலாளர் போன்ற உயர் அதிகாரிகளை உள்ளடக்கிய நிலை 18 அரசு ஊழியர்கள், 8வது ஊதியக் குழுவின் அதிகபட்ச சம்பள உயர்வைப் பெறுவார்கள்.
8th CPC Arrears: 8வது ஊதியக் குழு அரியர் தொகை
- 7வது ஊதியக் குழுவின் போது திருத்தப்பட்ட சம்பளங்களும் ஓய்வூதியங்களும் ஜூலை 2016 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டன.
- ஆனால் ஊழியர்களுக்கு ஜனவரி 2016 முதல் ஆறு மாதங்களுக்கான நிலுவைத் தொகை வழங்கப்பட்டது.
- முந்தைய ஊதியக் குழுவால் அமைக்கப்பட்ட முன்னுதாரணம், 10 ஆண்டு விதிப்படி, 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் ஜனவரி 2026 முதல் முன்தேதியிட்டு நடைமுறைக்கு வரும் என்பதைக் காட்டுகிறது.
- 8வது ஊதியக் குழு 2027 ஆம் ஆண்டின் இறுதிக்குள் தனது பரிந்துரைகளைச் சமர்ப்பித்து, அதன் அமலாக்கம் 2028 வரை நீடித்தால், ஊழியர்கள் ஜனவரி 1, 2026 முதல் நடைமுறைக்கு வரும் புதிய ஊதியத்தின்படி நிலுவைத் தொகையைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- எனினும், இதை இன்னும் மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

No comments:
Post a Comment