தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு நாளை (மே 5) தொடங்கி 28 ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இத்தேர்வை தமிழகம், புதுச்சேரியில் இருந்து 8.60 லட்சம் பேர் எழுத உள்ளனர். இதில் 28,353 தனித் தேர்வர்கள், 3,638 மாற்றுத் திறனாளிகள், 6 மூன்றாம் பாலினத்தவர், 73 சிறை கைதிகள் ஆகியோரும் அடங்குவர். இந்நிலையில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment