பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் - Asiriyar.Net

Sunday, June 13, 2021

பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

 






மாணவிகளின் பாதுகாப்பு கருதி பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். 


கரூரில் நூலகத்தை ஆய்வு செய்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசினார். 



நூலகங்களில் என்னென்ன வசதிகள் உள்ளன என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும், பள்ளிகளில் மாணவிகளுக்கு பாதுகாப்பான சூழல், கழிப்பறை, இருக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏதேனும் பிரச்னை இருக்கும்பட்சத்தில் முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. 


மேலும் மாணவிகளின் பாதுகாப்பு கருதி பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும்.



இந்த கல்வியாண்டில் நீதிமன்ற வழிகாட்டுதல்படியே தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிக்கப்படும். அதன்படி 75% கட்டணம் இரண்டு தவணைகளாக வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


கரோனா தொற்று முழுவதுமாக குறைந்து அனைத்து மாவட்டங்களிலும் தளர்வுகள் அளிக்கப்பட்ட பின்னர் முதல்வர் பள்ளிகளை திறக்கலாம் என அறிவித்தால் பள்ளிகளைத் திறக்கலாம் என்று தெரிவித்தார். 




No comments:

Post a Comment

Post Top Ad