மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிலுவைத்தொகை வழங்க அரசு சம்மதம். - Asiriyar.Net

Wednesday, June 30, 2021

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிலுவைத்தொகை வழங்க அரசு சம்மதம்.

 







மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிலுவையை செப்டம்பர் மாதம் வழங்க மத்திய அரசு சம்மதித்து விட்டதாக மத்திய அரசு ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.



அந்த சங்கத்தின் பொதுச்செயலாளர் சிவகோபால் மிஸ்ரா நேற்று டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-


கடந்த 26 மற்றும் 27-ந் தேதிகளில், டெல்லியில் வடக்கு பிளாக்கில் மந்திரிசபை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம். 28 முக்கிய பிரச்சினைகள் பற்றி விவாதித்தோம்.



ஒன்றரை ஆண்டாக நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. அதில், நிறுத்தி வைக்கப்பட்ட 3 அகவிலைப்படி உயர்வையும், வருகிற ஜூலை மாதம் வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வையும் சேர்த்து மொத்தமாக செப்டம்பர் மாதம் வழங்க மந்திரிசபை செயலாளர் ஒப்புக்கொண்டார். இந்த முடிவு, மத்திய அரசு ஊழியர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது.


இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment

Post Top Ad