நியமனம் ஓரிடம் - வேலை வேறு இடம்!! பள்ளி கல்வி அலுவலகங்களில் மாற்றுப் பணி உத்தரவுகள், அதிரடியாக ரத்து - Asiriyar.Net

Thursday, June 24, 2021

நியமனம் ஓரிடம் - வேலை வேறு இடம்!! பள்ளி கல்வி அலுவலகங்களில் மாற்றுப் பணி உத்தரவுகள், அதிரடியாக ரத்து

 




பள்ளி கல்வி அலுவலகங்களில், நியமனம் ஓரிடம்; வேலை வேறு இடம் என்று இருந்தவர்களின் மாற்றுப் பணி உத்தரவுகள், அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.


முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வி இணை இயக்குனர் பொன்னையா அனுப்பி உள்ள சுற்றறிக்கை:பள்ளி கல்வி துறை அலுவலகங்களில், பல்வேறு பதவிகளில் மாற்றுப் பணி உத்தரவு பெற்று, பலர் பணியாற்றி வருகின்றனர்.மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர் மற்றும் பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் ஆகியோர், இதுபோன்ற மாற்றுப் பணிகளில் பணியாற்றுகின்றனர்.



அவர்களின் மாற்றுப் பணி உத்தரவு, நிர்வாக நலன் கருதி ரத்து செய்யப்படுகிறது. மாற்றுப் பணியில் உள்ளவர்கள் உடனே அந்த பணியில் இருந்து விடுவிப்பு பெற்று, தங்களுக்கு நியமனம் வழங்கப்பட்ட, ஊதியம் பெறும் அலுவலக பணியில் சேர அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad