/p>
கொரோனா வைரசின் தாக்கம் தொடரும்நிலையில், விதவிதமான முககவசங்களும் விற்பனையில் கிடைக்கின்றன.
ஆனால் அவற்றில் எத்தனை, கொரோனா வைரசுக்கு எதிராக உண்மையான கவசங்களாக திகழ்கின்றன என்று யாருக்கும் தெரியாது. ஆனால் மராட்டிய மாநிலம் புனேயைச் சேர்ந்த ஒரு புதிய நிறுவனம், முப்பரிமாண அச்சிடல் மற்றும் மருந்தியலை ஒருங்கிணைத்து ஒரு முககவசத்தை தயாரித்துள்ளது. இந்த முககவசத்தை தொடும் கொரோனா வைரஸ் செயலிழந்துவிடும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையும் உறுதி அளித்துள்ளது.
திங்கர் டெக்னாலஜிஸ் என்ற அந்த புனே நிறுவனம் உருவாக்கியுள்ள புதிய முககவசத்தில், விருசிடேஸ் எனப்படும் வைரஸ் எதிர்ப்புபொருள், பூசப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment