பொதுவாக சில பேருக்கு நீண்ட தூரம் பயணம் செய்யும் போது வாந்தி, மயக்கம் போன்ற நிலை வரும். அப்படி நீண்ட தூரம் பயணம் செய்யும்போது வரும் வாந்தியை எப்படி தடுப்பது என பார்க்கலாம்.
சோம்பு:
பலவிதங்களில் சோம்பு நமக்கு பயன்படுகிறது. பயணத்தின் போது வாந்தி வருவதை தடுக்க சோம்பு பயன்படுகிறது. பயணத்தின் போது சோம்பை வாயில் போட்டு மென்று வந்தால் வாந்தி வருவது இருக்காது.
எலுமிச்சை:
எலுமிச்சையில் இருக்கும் மினரல்ஸ் வாந்தி வருவதை உடனடியாக தடுக்கிறது. இதன் காரணமாக ஒரு எலுமிச்சம் பழத்தை சிறிது நீரில் கலந்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும், வாந்தியும் வராது.
சர்க்கரை மற்றும் உப்பு:
உப்பு மற்றும் சர்க்கரை சிறிது நீரில் கலந்து குடித்து வர உடல் வறட்சி அடையாமலும், வாந்தி வராமலும் தடுக்கும்.
கிராம்பு:
ஒரு சிறிய கிராம்பு துண்டை வாயில் போட்டு மென்று வர வேண்டும். இவ்வாறு செய்தால் கிராம்பின் வாசனையும், அதன் சுவையும் வாந்தி வருவதை உடனடியாக தடுத்து நிறுத்தும்.
இஞ்சி:
சிறிதளவு இஞ்சியை பயணம் செய்யும் நேரங்களில் நீரில் போட்டு அத்துடன் சிறிது தேன் கலந்து பயணம் செய்யும் நாட்களில் குடித்து வருவதன் காரணமாக இந்த பிரச்சனையை எளிமையாக சரி செய்துவிடலாம்.