காலாண்டு விடுமுறை குறித்து எழுந்த சர்சைக்கு இதான் காரணம்..!! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, September 16, 2019

காலாண்டு விடுமுறை குறித்து எழுந்த சர்சைக்கு இதான் காரணம்..!!




காலாண்டு தேர்வு விடுமுறை விடப்படுமா என்ற கேள்வி எழுந்ததற்கான காரணம் காந்தியின் பிறந்தநாள் குறித்து மாநில திட்ட இயக்குனர் வெளியிட்ட வழிமுறை ஆகும்.

தமிழகம் முழுவதும் காலாண்டு தேர்வு முடிந்த பின்பாக செப்டம்பர் 23ஆம் தேதி முதல் அக்டோபர் 2_ஆம் தேதி வரை விடுமுறை என்று இந்த வருட தொடக்கத்திலேயே ஏற்கனவே பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது. இதையொட்டி வரும் அக்டோபர் 2_ஆம் தேதி காந்தியின் 150 வது பிறந்த நாளை ஒட்டி இந்த வருடம் தொடங்கி 2020_ஆம் ஆண்டு வரை விமர்சையாக கொண்டாட வேண்டும். இது குறித்து மத்திய மனித வளத்துறை மேம்பாட்டு அமைச்சகம் ஒவ்வொரு மாநிலத்துக்கும் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது.


அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 23ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 2_ஆம் தேதி வரை ஒவ்வொரு பள்ளியில் என்னென்ன நடவடிக்கை செய்ய வேண்டும் என்றும் , ஒவ்வொரு நாளும் என்ன செய்ய வேண்டும் என்று மாநில திட்ட இயக்குனர் ஒரு வழிமுறைகளை வெளியிட்டுள்ளார்.

அதன்படி 23-ஆம் தேதி சர்வமத பிரார்த்தனை காந்திய மதிப்புகளை மையமாகக் கொண்டு நிகழ்ச்சி நடத்த வேண்டும்.

24ஆம் தேதி காந்திய மதிப்புகளை மையமாகக்கொண்டு பாட்டு நாடகம் ஆகிய போட்டிகளை நடத்த வேண்டும் என்றும்,

25_ஆம் தேதி தூய்மை திட்டம் தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடத்த வேண்டும் என்றும், அறிவுறுத்தலை கொடுக்கப்பட்டிருந்தது.


26_ஆம் தேதி பேச்சுப்போட்டி , பட்டிமன்றம் மற்றும் சொற்பொழிவை நடத்த வேண்டும் என்றும்,

27_ஆம் தேதி கட்டுரைப்போட்டி , நாடகம் , சுயசரிதை எழுத மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்தல்

28_ஆம் தேதி ஓவியம் மற்றும் வண்ணம் தீட்டுதல் போட்டி நடத்துவது ,

1_ஆம் தேதி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்கும் வினாடி வினா போட்டி நடத்த வேண்டும்,

2_ஆம் தேதி காந்தி ஜெயந்தி விழாவில் அந்தந்த பள்ளிகளில் மாணவர்களுக்கான பண்பாட்டு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதை ஒட்டி தான் காலாண்டு தேர்வு முடிந்த பின் விடுமுறை விடப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

Post Top Ad