தங்கம் மீண்டும் தாறு மாறு உயர்வு..! அதிருப்தியில் பொதுமக்கள்..! - Asiriyar.Net

Monday, September 16, 2019

தங்கம் மீண்டும் தாறு மாறு உயர்வு..! அதிருப்தியில் பொதுமக்கள்..!



கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவை கண்டு வந்தாலும் இன்று ஒரே நாளில் மீண்டும் கிராமுக்கு 42 ரூபாய் அதிகரித்து விற்பனையாகி வருகிறது.

ஒரு மாத காலமாகவே சவரன் விலை 29 ஆயிரத்தை கடந்து விற்பனையானது. அதற்கிடையில் சில நாட்கள் 30 ஆயிரத்தை கடந்து விற்பனையானது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி கிளம்பி இருந்தது. தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 10 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக உயர்த்தப்பட்டதிலிருந்து சுமார் 4 ஆயிரம் வரை சவரன் விலை அதிகரித்தது.

 



இன்றைய நிலையில் ஒரு சவரன் தங்கம் வாங்க வேண்டுமென்றால் செய்கூலி சேதாரம் என சேர்த்து 32 முதல் 33 ஆயிரம் ஆகும் நிலை உள்ளது.

இந்த நிலையில் கடந்த வாரம் முழுவதும் தங்கத்தின் விலை மெல்ல மெல்ல குறையத் தொடங்கி 30 ஆயிரத்திலிருந்து 28 ஆயிரம் வரை குறைந்தது.

இந்த நிலையில் இன்று ஒரே நாளில் கிராமுக்கு 42 ரூபாய் மீண்டும் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன்படி இன்றைய காலை நேர நிலவரப்படி தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

கிராமுக்கு 42 ரூபாய் அதிகரித்து, 3626.00 ரூபாயாகவும், சவரனுக்கு 336 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து 8 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்

ஒரு கிராம் வெள்ளி 1.70 அதிகரித்து 50.40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.




Post Top Ad