தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு கட்டுப்பாடு - பள்ளி கல்வித்துறை உத்தரவு. - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, September 18, 2019

தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு கட்டுப்பாடு - பள்ளி கல்வித்துறை உத்தரவு.



அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு, புதிய கட்டுப்பாடு விதித்து, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அரசு உயர் நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான தகுதியானோர் பட்டியலை, தமிழக பள்ளி கல்வித்துறை தயாரித்துள்ளது.

இதுகுறித்து, பள்ளி கல்வி இயக்குனர், கண்ணப்பன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:கடந்த, 2003, 2004ம் ஆண்டுகளில், இளநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர்களாக தேர்வானவர்கள், மாதம், 4,500 தொகுப்பூதியம் அடிப்படையில் பணியாற்றினர். அவர்களுக்கு, 2006 ஜூனில், பணி வரன்முறை செய்யப்பட்டது.

ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு, அவர்கள் எப்போது பணியில் சேர்ந்தாலும், பணி வரன்முறை செய்யப்பட்ட நாளே கணக்கில் கொள்ளப்படும். தற்போது, 2019 ஜன., 1ம் தேதியை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியலுக்கு, 2002ம் ஆண்டு வரை, தேர்வு செய்யப்பட்ட முதுநிலை ஆசிரியர்களே, போதுமானதாக உள்ளனர்.எனவே, 2003 மற்றும், 2004ல் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், இந்த பதவி உயர்வுக்கு, தேர்வு செய்யப்படவில்லை.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Post Top Ad