FLASH NEWS :- ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை பணியில் நீடிக்க அனுமதிக்க கூடாது: உயர்நீதிமன்றம் உத்தரவு!! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, May 1, 2019

FLASH NEWS :- ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை பணியில் நீடிக்க அனுமதிக்க கூடாது: உயர்நீதிமன்றம் உத்தரவு!!




ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை பணியில் நீடிக்க அனுமதிக்க கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தகுதித் தேர்வு எழுதாத ஆசிரியர்களுக்கு 2 வாரத்தில் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்க  உத்தரவிடப்பட்டுள்ளது. தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பிரச்சனையில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை பணிநீக்கம் செய்ய தடைகோரி 4 ஆசிரியர்கள் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.


*✍தகுதித் தேர்வு எழுதி 60 ஆயிரம் பேர் வேலைக்கு காத்திருக்கும் நிலையில் தகுதி தேர்வு எழுதாத ஆசிரியர்கள் பணியில் நீடிக்க எந்த காரணமும் இல்லை - உயர்நீதிமன்றம்*

*✍✍8 ஆண்டுகள் அவகாசம் வழங்கியும், தகுதித் தேர்வு முடிக்காதவர்களுக்கு கருணை காட்ட முடியாது - உயர்நீதிமன்றம்.

Post Top Ad