G.O.79 - முறையான அங்கீகாரம் பெறாத பள்ளிகளின் கால அவகாசம் நீட்டிப்பு: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!! G.O. PUBLISHED - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, May 9, 2019

G.O.79 - முறையான அங்கீகாரம் பெறாத பள்ளிகளின் கால அவகாசம் நீட்டிப்பு: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!! G.O. PUBLISHED










முறையான அங்கீகாரம் பெறாத அரசு, மற்றும் தனியார் பள்ளிகள் இம்மாத இருத்திற்குள் அரசு அங்கீகாரம் பெறவேண்டும் என அறிவித்திருந்த நிலையில் இதற்கான கால அவகாசத்தை மேலும் ஒரு ஆண்டு நீட்டிப்பு செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு வழங்கியுள்ளது. 2009-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் அடிப்படியில் செயல்படக்கூடிய பள்ளிகள் முறையான அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும் என்பது அரசின் விதியாக உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் அரசு பள்ளி, தனியார் பள்ளி, அரசு உதவி பெரும் பள்ளி என மூன்று வகையாக பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.



இதில் தனியார் மற்றும் அரசு பள்ளியை சேர்ந்த சுமார் 800-க்கும் மேற்பட்ட பள்ளிகள் தமிழகத்தில் முறையாக அங்கீகாரம் பெறாமல் இயங்கிவருவதாக சில நாட்களுக்கு முன்பாக பள்ளிக்கல்வித்துறை சார்பாக பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. இந்த பள்ளிகள் வரும் 31-ம் தேதிக்குள் அங்கீகாரத்தை முறையாக பெற வேண்டும். இல்லையெனில் அப்பள்ளிகளை மூடப்பட வேண்டும் என கடுமையாக எச்சரிக்கப்பட்டது. இந்த நிலையில் தனியார் பள்ளி கூட்டமைப்பு சார்பில் பள்ளிக்கல்வித்துறைக்கு ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. இதில் மாணவர்களின் நலன் கருதி காலநீட்டிப்பை வழங்க வேண்டும் என்றும், இந்த கெடுவை தளர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதாவது குறிப்பிட்ட பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்கள் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வேண்டுமானால் அந்த பள்ளியானது முறையாக அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். ஒரு பள்ளி முறையான அங்கீகாரம் பெறவில்லை என்றால் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத தகுதியில்லாத மாணவர்களாக அறிவிக்கப்படுவார்கள். எனவே தற்போது 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு செல்ல இருக்கும் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட கூடாது என்பதன் அடிப்படையிலும் அதேபோல அப்பள்ளியில் செயல்படக்கூடிய வாகனங்களுக்கு தரச்சான்று வாங்கப்படுவது வழக்கம். ஆனால் அதற்கும் பள்ளியில் அங்கீகாரம் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.


எனவே இந்த காரணங்களுக்காக அடுத்த வருடம் மே 31-ம் தேதிக்குள் முறையான அங்கீகாரத்தை ஒவ்வொரு பள்ளியும் பெற வேண்டும் என்று தற்போது கால அவகாசத்தை நீட்டிப்பு செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு வழங்கியது.

Post Top Ad