![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEivNI91zbtmsC43Q__nDoyUuOAotoOjwsslJDA9rdndMa7bYCwEIW78RxGak1IC5FXv31tdl-I7T7iEQdEXXqbSNToC_KZnOmDmHJgxbR65PSOyxI-Fp5ZTOa0V_M4eoIizJrBqp9-yif9j/s1600/IMG_ORG_1557578317349.jpeg)
அரசுப் பள்ளி ஆசிரியர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைத்த கல்வியாளர் சங்கமம்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfHpqUw0tw2JznoHUwBLmJLJeroYMYb7Dz1ohUNjTyCiJaEt9wVANXEBonSpKNOzYHWLO-b5dioYJC69YYDT_iEUNAu5NKiVXCOdrzdypAheS7aSecClksDj0YAoJrlulTY_nstl6GOYHE/s1600/IMG_ORG_1557578329065.jpeg)
இராமேஸ்வரம்: அரசுப் பள்ளியில் சிறப்பாக செ யல்டும் ஆசிரியர்களை கௌரவிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் மாநிலம் முழுவதும் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களை கண்டறிந்து அவர்களுக்கு விருது வழங்குவது வழக்கம்.அதே போல் இந்தாண்டு விருது வழங்கும் விழா ராமேஸ்வரத்தில் உள்ள எஸ்.எஸ்.எம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது..
விழாவிற்கு வந்திருந்த ஆசிரியர்கள் அனைவரும் முதல்நாளான வெள்ளிக்கிழமை கல்வியாளர் சங்கமத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுற்றுலாவிற்கு இரண்டு அரசுப் பேருந்துகளில் சென்றனர்.
முதலாவதாக தனுஷ்கோடி மற்றும் அரிச்சல் முனைப் பகுதிகளுக்குச் சென்றனர்.. அங்கு கடல் அலையில் கால் நனைத்து மகிழ்ந்தவர்கள் தங்களது மாவட்டத்தைச் சேர்ந்தவர்களோடும் நண்பர்களோடும் ஒன்றாக புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்கள்.
அதன் பின்பு
தனுஷ்கோடியில் ஒரு அருங்காட்சியகம் போல் உள்ள சிதிலமடைந்த தேவாலயம் மற்றும் சில கட்டிடங்களையும் பார்த்தனர்.. அங்கு தங்களுக்கு தேவையான மற்றும் குழந்தைகளுக்கு தேவையான வளையல்,பாசி,சங்கு வாங்கினர்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEinJKElKyPv6c0RKSz5AGNcqxU9e59mn1k2-7VlAWgx-78xaZY-LVXv5g2FrDH9ZBtz-QMsY_gpnk9payBT7BMPxrLoJGoSTj_nw3vJcJ-T4qFt-AvY_-iGnLtRE5Fg7b5Eu_dB7jYWaZxa/s1600/IMG_ORG_1557577748380.jpeg)
பின்னர் மண்டபம் கடல் வாழ் உயிரினங்கள் காட்சியகம் சென்றனர்.. கடல் வாழ் உயிரினங்களின் காட்சியகத்தில் உள்ள ஆக்டோபஸ், பாம்பு மீன், கிளி மீன், கடல் பல்லி, பசு மீன், சிங்க மீன், எலி மீன், நெருப்பு மீன், வெண்ணெய் மீன், கோமாளி மீன், கார்பஸ், பெருங்கடல் நண்டுகள், கடல் தாமரை, பீச்டாமெட், நட்சத்திர மீன்கள், கடற்குதிரைகள், சுறாமீன் மற்றும் இறால் வகைகள் போன்ற கடல் வாழ் உயிரினங்ளை பார்வையிட்டு ரசித்தனர்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgsrL1Psy8AmisK4J3VeKX4tM63KhkXpUzv2LXK00fE0zimz5hhrse82WeP4A_FbLBHrAJKq-vFnRs2wTGRrTTxfaCLjaJpnZF2wtJwXDp0i4LReVi4AmW8vrNs8LfeRIbwZftj-SoZr43v/s1600/IMG_ORG_1557577741554.jpeg)
முடிவில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் நினைவு மண்டபம் சென்றனர்.அங்கு மணிமண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த அப்துல்கலாமின் 700 புகைப்படங்கள், 900 அப்துல்கலாம் ஓவியங்கள், மற்றும் ஒரே ஓவியத்தில் உள்ள அப்துல்கலாமின் 50 புகைப்படங்களை பார்த்து கலாமின் வரலாற்றினை தெரிந்து கொண்டனர்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjWMRIBBu4jCEIqXMzHcS8XGibaBZ0iNusOLhu0zvseuhGF0P4Fmxei9HtbMz-q5adYoTatixhURRIr-NAFiw2Sfpefxo7CYcVZT4gp3AjR9lkCdSaPn734kS-K16czqkLrpoA_f2QNBojZ/s1600/IMG_ORG_1557577758105.jpeg)
மேலும், அம்மணிமண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த அப்துல் கலாம் வீனை வாசிப்பது போன்ற சிலையை பார்த்து அவர் கலையின் மீதி கொண்டிருந்த ஈடுபாட்டை தெரிந்து கொண்டனர்.
பின்னர் இனிதே சுற்றுலாவை முடித்துக் கொண்டவர்கள் திருமண மண்டபம் வந்தடந்தனர்..அதன் பின்பு நடைபெற்ற கலைத்திருவிழாவில் மாநிலம் முழுவதிலும் வந்திருந்த சிறந்த ஆண்,பெண் ஆசிரியர்கள் அனைவரும்பாடல் பாடியும்.கவிதை வாசித்தும்,நடனமாடியும் தங்களது திறமைகளை வெளிக்காட்டினார்கள்..
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhI3E3I2gOr6EEC3XVzdZRvSUO7-86FTuKvkzubYNLFgkX97wEu3rnun8HhRD0ZNXFIeGcMxRU9h7eGsZKA6WKXDmgXqttrx8WbCJE2TxhDnBhodbiWZZuZinc6uDhqW7IcZJdy8PRpCESi/s1600/IMG_ORG_1557577717533.jpeg)
அதே போல் சிறப்பாக செயல்படும் ஒரு சில பள்ளிகளில் இருந்து வந்திருந்த மாணவர்களும் கீ போர்டு வாசித்தும்,நடனமாடியும் தங்களது திறமையை வெளிக்காட்டினார்கள்.இவ்வாறு அரசுப் பள்ளியில் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்தி வரும் ஆசிரியர்கள் கலாம் மண்ணில் ஒன்று கூடி இருப்பதை கண்ட அப்பகுதி மக்கள்,வியாரிகள் அனைவரும் பாராட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiX9iP4XJzehtq0d_EY6VE8iozUAVJ9Dmkefr8pjKTVxSQbF3zLXPq7QhMzBGQWPGVbPr_g5tt89tPVdfLjZaZENbu3oxnjn2IbqdwH0EIViZS-GF-2qRemEG-f0E-W3d1nlqQbd4wlkAZV/s1600/IMG_ORG_1557577712618.jpeg)
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் கல்வியாளர் சங்கமத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஷ்குமார் செய்திருந்தார்.