அரசின் புதிய பாடத்திட்டம் குறித்து வெளியான சிலிர்ப்பான உண்மை.? கொடி கட்டி பறக்கப்போகும் தமிழக மாணவர்கள் - நீட் தேர்வால் அம்பலமான உண்மை..! - Asiriyar.Net

Thursday, May 9, 2019

அரசின் புதிய பாடத்திட்டம் குறித்து வெளியான சிலிர்ப்பான உண்மை.? கொடி கட்டி பறக்கப்போகும் தமிழக மாணவர்கள் - நீட் தேர்வால் அம்பலமான உண்மை..!





சிபிஎஸ்இ பாடத்திட்டம் மட்டுமே அகில இந்திய தேர்வுகளுக்கு ஏற்றதாக அமையும் என்ற கருத்து இங்கே காலம் காலமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அதற்கு இணையாக தமிழக பாடத்திட்டமும் உயர்ந்துள்ளது என்பது சிலிர்ப்பான உண்மை.

ஒரு காலகட்டத்தில் ஐஐடி கல்லூரியில் சேர வேண்டுமானால் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் மட்டுமே சேரமுடியும் என்ற நிலை இருந்தது.

ஆனால் தற்போதைய அரசு சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு இணையாக பாடங்களை நமது மாணவர்களுக்கு வகுத்துக் கொடுத்து இருக்கிறார்கள்.

இந்த முயற்சி கட்சி சார்பற்று பாராட்டப்பட வேண்டிய விஷயம் நீட் ஆகட்டும் ஐஐடி என்று ஆகட்டும், இனி வரும் காலங்களில் நமது தமிழக மாணவர்கள் நுழைவுத்தேர்வு எழுதி நிறைய இடங்களைப் பெற்று அருமையான வல்லுநர்களாகவும் மருத்துவர்களாகவும வர இருக்கிறார்கள்.

சமீபத்தில் நடந்து முடிந்த நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்துமே தமிழ்நாடு புதிய பாடத்திட்டத்தில் இருந்தே கேட்கப்பட்டுள்ளன.

நீட் தேர்வுக்கு தமிழகத்தில் எதிர்ப்பு நிலவி வந்த சூழலில் நேர்மறையாக சிந்தித்து செயல்படுவதற்கு மக்கள் மீது உண்மையான அக்கறையும் அசாத்தியமான உளத்துணிவும் வேண்டும். இரண்டையுமே அதிமுக அரசு வெளிப்படுத்தியுள்ளது.

Post Top Ad