3,000 ஆசிரியர் பணியிடங்களை காவு வாங்கும் இலவச கட்டாயக்கல்வி சட்டம்!! - Asiriyar.Net

Sunday, May 12, 2019

3,000 ஆசிரியர் பணியிடங்களை காவு வாங்கும் இலவச கட்டாயக்கல்வி சட்டம்!!





தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் இலவச சேர்க்கைக்கு சனிக்கிழமை நிலவரப்படி பெற்றோரிடமிருந்து 86,922 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. 
அதிகபட்சமாக வேலூர் மாவட்டத்தில் 6,487, மதுரையில் 5,962, சென்னையில் 5,353, சேலத்தில் 5,056 என்ற அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இது தவிர காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். அதே வேளையில் குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 366, அரியலூர் 684, பெரம்பலூர் 696, கரூர் 957 பேர் விண்ணப்பித்துள்ளனர். 
இந்த ஆண்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தனியார் பள்ளிகளில் அரசு செலவில் சேர உள்ளதால் சுமார் மூன்றாயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காணாமல் போகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது ஆண்டுதோறும் தொடரும் என்பதால் தொடக்கக்கல்வியில் ஆசிரியர் பணிநியமனம் இனி கிடையாது என்பதே உண்மையாகும்.

Post Top Ad