கற்றலில் புதுமை!! ஆசிரியரின் துனையுடன் Android App உருவாக்கிய "அரசுப்பள்ளி மாணவன்" - Asiriyar.Net

Sunday, September 23, 2018

கற்றலில் புதுமை!! ஆசிரியரின் துனையுடன் Android App உருவாக்கிய "அரசுப்பள்ளி மாணவன்"



கற்றலில் நாள்தோறும் புதுமைகளைப் படைத்து வரும் வேலூர் மாவட்டம், வாணியம்பாடி கல்வி மாவட்டம், நாட் றம் பள்ளி ஒன்றியம் சிந்தகமாணி பெண் டா மலைப் பள்ளி புதிய கற்றல் தொழில்நுட்பங்களைக் கொண்டு எளிய வழியில் கற்றல் முறைகளை உருவாக்கியதில் தமிழ்நாட்டில் முதன்மைப் பள்ளியாகும்.


🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎 

இதற்காக இப்பள்ளியில் பணியாற்றும் ஆங்கில பட்டதாரி ஆசிரியர் திரு .A.அருண்குமார் M.A.B.ed என்பவருக்கு தமிழக அரசு "கனவு ஆசிரியர்" விருது வழங்கி பாராட்டியது.

அதனைத் தொடர்ந்து கற்றலில் விளையாட்டு மூலம் கல்வியினை எளிமைப்படுத்த முயன்ற ஆசிரியர் தற்போது அம்முயற்சியிலும் வெற்றி பெற்றுள்ளார். கல்வி அறிவு குறைவான மக்கள் வசிக்கும் இப்பகுதியில் இரு மொழி பேசும் அதாவது தெலுங்கு, தமிழ் பேசும் இப்பள்ளி மாணவர்கள் Video game முறையில் தாெடுதிரையில் மாணவனேAndroid Apps மூலம் விளையாட்டினை உருவாக்கி பயிலும் புதிய முறையை உருவாக்கியுள்ளார் . 

https://youtu.be/0F4g6F18Zxg

மாணவன் தொடு திரையில் தானாகவே தான் விரும்பும் படி நிலைகளை உருவாக்கி, மாணவனே அதை scan செய்து விளையாட்டை உருவாக்கி விளையாட்டின் மூலம் தானே கற்கும் நாய முறைதான் Video game lesson . 

🍇🍇🍇🍇🍇🍇🍇

இம்முறையில் வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களும் தான் விரும்பும் படி, எண்ணத்திற்கேற்ப Video game உருவாக்கி இப்பள்ளி மாணவர்களின் புதிய கற்றல் முயற்சிகள் பாராட்டப்பட வேண்டிய தாய் உள்ளது. இம்முறையினை தமிழகத்தில எல்லா பள்ளிகளிலும் அறிமுகம் படுத்தினால் ஆசிரியரின் கற்பித்தல் நேரம் குறைந்து மாணவர்களின் தானே கற்கும் நேரம் மிகுதியாகும் . இதனால் கற்றல் எளிமையாகும்...


இந்த  தொழில்நுட்பத்தினை இலவசமாக பெற  இவரை தொடர்பு கொள்ளவும் - 9786884566

Post Top Ad