இடைநிலை ஆசிரியர்களின் Level of Pay 20600 - 65500 என குறிப்பிடுவது சரியா என்பது பற்றிய விளக்கம் - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, May 24, 2022

இடைநிலை ஆசிரியர்களின் Level of Pay 20600 - 65500 என குறிப்பிடுவது சரியா என்பது பற்றிய விளக்கம்

 


இடைநிலை ஆசிரியர்களின் Level of Pay 20600 - 65500 என குறிப்பிடுவது சரியா என்பது பற்றிய விளக்கம்.


நிதித்துறை அரசாணை எண்: 90 நாள்: 26.02.2021- ல் வெளிவந்த பின்னரும் இ.நி.ஆசிரியர்களின் Level of pay என்பதை 20600 - 65500 என்று சிலபல இடங்களில் குறிப்பிட்டு வருகின்றனர். இதனால் ஆண்டுதோறும் வழங்கும் ஆண்டு ஊதிய உயர்வினையும் வழங்க மறுக்கும் நிலையும் காணப்படுகிறது. அரசாணை 90 - ல் Schedule 1 and III containing the pay matrix for employees pay appended to this order shall be substituted for the schedule - 1 and III in the government order first read above என உள்ளது. 


அதாவது இந்த அரசாணையில் உள்ள schedule 1 and III ல் உள்ள Pay matrix அட்டவணை, மேலே முதலில் படிக்கப்பட்ட அரசாணையில் ( அதாவது பார்வை 1 - ல் உள்ள அரசாணை 303- ல் ) உள்ள schedule 1 and III க்கு மாற்றாக மாற்றப்படும் என்பதாக குறிப்பிடப்பட்டு, அட்டவணை 1 என்பது முந்தைய ஊதிய விகிதங்களுக்கு ( Existing Level of Pay ) இணையான Revised Levels of Pay குறிப்பிட்ட அட்டவணையாக உள்ளது.


எனவே Revised Levels of Pay அட்டவணைப்படி இ.நி்.ஆசிரியர்களின் ஊதிய நிலை 20600 - 75900 என்பதே சரியானது. 

 

இவ்வாறான நிலைகளில் ஆண்டு ஊதிய உயர்வு சிலபல இடங்களில் மறுக்கப்பட்டதால், கேட்கப்பட்டு பெறப்பட்ட RTI தகவலிலும், ஊதிய நிலை 10 - ல் ரூ.20600 - 75900 என அரசாணை நிலை எண். 90 நிதித்துறை நாள்: 26.02.2021 - ல் திருத்தி அமைத்து ஆணையிடப்பட்டதனால் ஊதிய நிலை (Level )10 - ல் தளம் ( Cell ) 40 - ஐ ( ரூ.65500) அடைந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மேற்கூறிய அரசாணையின்படி வருடாந்திர ஊதிய உயர்வினை தொடர்ந்து அனுமதித்திடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 இந்த RTI தகவலானது இ.நி.ஆசிரியர்களின் Level of Pay என்பது 20600 - 75900 என்பதையும், வருடாந்திர ஊதிய உயர்வினை தொடர்ந்து அனுமதித்திடலாம் என்பதையும் தெளிவாக்குகிறது. 


எனவே ஆசிரிய நண்பர்கள் Revised Levels of Pay அட்டவணைப்படி அனைவருக்கும், குறிப்பாக இ.நி.ஆசிரியர்களுக்கு ஊதிய நிலை குறிப்பிடப்படுவதை கவனிக்க வேண்டுகிறேன். அத்துடன் அரசாணைப்படி ஆண்டு ஊதிய உயர்வினை ஆண்டுதோறும் தொடர்ந்து வழங்கப்படுவதை உறுதி செய்ய தொடர்ந்து முயற்சிக்க அன்புடன் வேண்டுகிறேன். 


Click Here to View - RTI Letter


நன்றி. 


தகவல் தொகுப்பு:

C. THOMAS ROCKLAND

TRICHY URBAN.
Post Top Ad