ஜாதி அடையாள கயிறு மாணவர்களுக்கு தடை - CEO PROCEEDINGS - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, May 6, 2022

ஜாதி அடையாள கயிறு மாணவர்களுக்கு தடை - CEO PROCEEDINGS

 

ஜாதியை அடையாளப்படுத்தும் கயிறுகள் அணிய, பள்ளி மாணவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள், ஜாதி அடையாளத்தை காட்டும் வகையில், கைகளில் வண்ண கயிறு கட்டிக் கொள்கின்றனர். இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், பிளஸ் 2 மாணவர் ஒருவர் பலியானார்.


இந்நிலையில், முதன்மை கல்வி அலுவலர்கள் தரப்பில், பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:பள்ளி மாணவர்கள் பல வண்ணங்களில் கைகளில் கயிறு அணிந்து, தங்களின் ஜாதியை அடையாளப் படுத்துகின்றனர். அதன் வாயிலாக, பல ஜாதி குழுக்களாக பிரிந்துள்ளதும் தெரியவந்துள்ளது.


இதனால், உணவு இடைவேளை, விளையாட்டு நேரம் ஆகியவற்றில், மாணவர்கள் கலந்து பழகாத சூழல் நிலவுவதும் தெரியவந்துள்ளது.எனவே, தலைமை ஆசிரியர்கள் இந்த விஷயத்தில் தனி கவனம் செலுத்தி, ஜாதி கயிறுகளால் மாணவர்களுக்கு ஏற்படும் விளைவுகளை எடுத்து கூற வேண்டும்.


ஜாதி பிரிவினையை துாண்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, பிரார்த்தனை கூட்டத்தில் அறிவுறுத்த வேண்டும். மாணவர்கள், ஜாதி அடையாள கயிறுகள் அணிவதை தடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.Post Top Ad