அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இனி காலை சிற்றுண்டி - முதலமைச்சர் அறிவிப்பு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, May 7, 2022

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இனி காலை சிற்றுண்டி - முதலமைச்சர் அறிவிப்பு

 




திமுக ஆட்சி ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். துளி போன்ற ஓராண்டு காலத்தில் கடல்போல் சாதனைகளை செய்துள்ளோம் என பேசினார். தமிழக மக்களுக்காக கடந்த ஓராண்டில் உண்மையுடன் உழைத்தேன் என்ற நம்பிக்கையுடன் இந்த அவையில் பேசுகிறேன். நான் கலைஞர் அல்ல, அவரைப் போல பேச தெரியாது, எழுத தெரியாது, ஆனால் அவரைப் போல உழைக்க முயன்றேன்.


சமச்சீரான வளர்ச்சியை அடையும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 29C பேருந்தில் பயணித்து தான் நான் பள்ளிக்குச் சென்றேன். அந்த வழித்தட பேருந்தில் இன்று நான் ஆய்வு செய்தது மகிழ்ச்சி. மகளிருக்கு பேருந்தில் இலவசம் என்ற திட்டம் குறித்து 3 வழித்தடங்களில் 465 பயணிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. மகளிருக்கு பேருந்தில் இலவசம் என்ற திட்டம் மூலம் பெண்களின் மாத வருமானத்தில் 11% மிச்சமாகியுள்ளது. மகளிருக்கு பேருந்தில் இலவசம் என்ற திட்டம் மூலம் பெண்களுக்கு ரூ.600 முதல் ரூ.1,200 வரை மாதந்தோறும் மிச்சமாகியுள்ளது.


கொரோனா கால உதவித்தொகையைான 4 ஆயிரம் ரூபாயை 2.9 கோடி பேர் பெற்றுள்ளனர். ஆவின் பால் விலையை ரூ.3 குறைத்ததன் மூலம் ஒரு கோடி பேர் பயன் பெற்றுள்ளனர். 108 அவசர ஊர்தி மூலம் பயன்பெற்றவர்கள் 16.41 லட்சம் பேர். கலைஞர் காப்பீடு திட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவர்கள் 1.34 கோடி பேர். உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற்றவர்கள் 1,24,000 பேர். இல்லம் தேடி கல்வி திட்டத்தால் பயன்பெற்றவர்கள் 30 லட்சம் பேர். கட்டாயக் கல்வி திட்டத்தின்கீழ் சேர்க்கப்பட்டவர்கள் 56 ஆயிரம் பேர். சமூக பாதுகாப்பு வளைகாப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற்ற கர்ப்பிணிகள் 96 ஆயிரம் பேர்.


1.71 லட்சம் மீனவக் குடும்பங்கள் 5 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற்றுள்ளனர். ஊரக பகுதிகளில் குடிநீர் இணைப்பு பெற்ற வீடுகளின் எண்ணிக்கை 14.32 லட்சம் பேர். 68,800 பேர் சிறப்பு வேலைவாய்ப்பு  முகாம்கள் மூலம் பணிவாய்ப்பு பெற்றுள்ளனர். 14,83,961 பேருக்கு கடந்த ஓராண்டில் பயிர்கடன் வழங்கப்பட்டுள்ளது. 63,077 காவலர்கள் ஒருநாள் விடுப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற்றுள்ளனர்.


நடப்பாண்டு ரூ.80 கோடி செலவில் 4,694 கி.மீ. தூரத்திற்கு தூர்வாரும் பணிகள் நடந்து வருகின்றன. 1.85 லட்சம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. சென்னை, கிண்டியில் மருத்துவமனை, அரசு பணிகளில் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம், இல்லம் தேடி மருத்துவம் என பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு, காமராஜர் கல்லூரி மேம்பாட்டு திட்டம், மாவட்டங்களில் புத்தக சந்தைகள் என பல திட்டங்கள் தொடங்கப்பட்டன. காவல் ஆணையம், பொருநை அருங்காட்சியகம், மீண்டும் மஞ்சபை இயக்கம் ஆகிய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. ஓராண்டில் 70% திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.


நகைக்கடன் தள்ளுபடியால் 22,20,109 பேர் பயனடைந்துள்ளனர். அகவிலைப்படி உயர்வால் 9.32 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர். ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.  அரசு திட்டங்களின் பயன்கள் சென்று சேராத இடமே தமிழகத்தில் இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது. மக்கள் என் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றி உள்ளேன். சொன்னதை செய்திருக்கிறோம், சொல்லாததையும் கடந்த ஓராண்டில் நிறைவேற்றியிருக்கிறோம்.


 எல்லாருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல், அதுவே இந்த அரசின் நோக்கம். ஆவடியில் நரிக்குறவர் இல்லத்தில் எனக்கு கொடுக்கப்பட்ட உணவு காரமாக இருந்தாலும் அதில் அன்பு வெளிப்பட்டது. கறிக்குழம்பு காரமாக இருந்ததால் தான் கொரோனா வரவில்லை என நரிக்குறவர் மகக்ள் தெரிவித்தனர். சமூக நோய்களில் இருந்து காப்பாற்றும் காரமான அரசு இந்த அரசு. மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்பதே எனது கவலை என பேரவையில் முதல்வர் உரையாற்றினார்.






Post Top Ad