கொரோனா தடுப்பூசி போட்டவர்கள், அதற்கான சான்றிதழை பதிவிறக்கம் செய்வது எப்படி? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, June 7, 2021

கொரோனா தடுப்பூசி போட்டவர்கள், அதற்கான சான்றிதழை பதிவிறக்கம் செய்வது எப்படி?

 




கொரோனா தடுப்பூசி போட்டவர்கள், அதற்கான சான்றிதழை பதிவிறக்கம் செய்வது எப்படி?


https://selfregistration.cowin.gov.in/  


மேற் கண்ட இணைய தள இணைப்பை தொட்டு,


தடுப்பூசி போடும் போது தடுப்பூசி மையம் அல்லது மருத்துவமனையில் தந்த கைபேசி எண்ணை உள்ளீடு செய்யவும்.


உங்கள் கைபேசி எண்ணுக்கு வரும் 6 இலக்க OTP எண்ணை உள்ளீடு செய்தவுடன், Certificate என்ற ஐகான் இருக்கும்.


அதை தொட்டவுடன் தடுப்பூசி போட்டதற்கான சான்று Pdf வடிவில் பதிவிறக்கம் ஆகும். உடனே பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


மேலும் இந்த சான்றை உங்கள் மின்னஞ்சல் அல்லது பள்ளிக்கான முகவரியில் சேமித்து வைத்துக் கொள்ளவும்.


5 நகல்கள் பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.


ஏனென்றால், பிற்காலத்தில் இந்த சான்றை அனுவலகத்தில் சமர்ப்பிக்க நேரிடும்.


EMIS இணைய தளத்திலும் பதிவேற்றம் செய்யக் கூடிய சூழலும் வரலாம்.


இந்த மெசேஜை ஸ்டார் குறியிட்டு சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.




Post Top Ad