3,5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கிடையாது!” - கொள்கை முடிவுகளில் தமிழக அரசு ஒருபோதும் பின்வாங்காது!” - அமைச்சர் செங்கோட்டையன் - Asiriyar.Net

Post Top Ad


Thursday, September 17, 2020

3,5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கிடையாது!” - கொள்கை முடிவுகளில் தமிழக அரசு ஒருபோதும் பின்வாங்காது!” - அமைச்சர் செங்கோட்டையன்

 


3,5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கிடையாது!”மத்திய அரசு எவ்வளவு வலியுறுத்தினாலும் சில கொள்கை முடிவுகளில் தமிழக அரசு ஒருபோதும் பின்வாங்காது!” - அமைச்சர் செங்கோட்டையன்


மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை, தமிழக அரசின் இரு மொழிக் கொள்கைக்கு முற்றிலும் எதிராக உள்ளதாக மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார்.புதிய கல்விக்கொள்கை தொடர்பாக சட்டப்பேரவையில் உரை நிகழ்த்திய அவர், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை, தமிழக அரசின் இரு மொழிக் கொள்கைக்கு முற்றிலும் விரோதமாக உள்ளதாகக் குறிப்பிட்டார். 3, 5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த புதிய கல்விக் கொள்கை வலியுறுத்துவதாகவும், இது தமிழகத்தில் சிறப்பாக உள்ள நமது கல்வி முறைக்கு எதிரானது என்றும் அவர் கூறினார். மேலும், உயர்கல்வி ஆணையத்தை அமைப்பதன் மூலம், மத்திய அரசு, மாநில அரசின் அதிகாரங்களை பறிக்க முயல்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார். எனவே, புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முழுமையாக எதிர்க்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலின்  வலியுறுத்தினார்.இது குறித்து விளக்கம் அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், வரைவு அறிக்கையின் மீதான தமிழக அரசின் கருத்துக்கள் கடந்த ஆண்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.அதில் தமிழகத்தில் மும்மொழிக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையே இருக்கும் என தெளிவாக சொல்லப்பட்டது. மத்திய அரசு, மாநில அரசு இடையே இருக்கும் மொழி ஆங்கிலம் தான் இருந்து வருகிறது. புதிய கல்விக்கொள்கையை முழுமையாக பரிசீலனை செய்ய பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளதுஅந்த குழு அறிக்கை தாக்கல் செய்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசினார்.மேலும் சமூக நீதி, கூட்டாட்சி தத்துவத்திற்கு பாதிப்பு உண்டாக்கினால் புதிய கல்விக்கொள்கையை அனுமதிக்க மாட்டோம் என்றும் மத்திய அரசு எவ்வளவு வலியுறுத்தினாலும் சில கொள்கை முடிவுகளில் தமிழக அரசு ஒருபோதும் பின்வாங்காது  3,5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கிடையாது என்பதில் ஒரு போதும் பின்வாங்கப்போவதில்லை என அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்தார்.

Recommend For You

Post Top Ad