அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் இருவருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில், இதுவரை, 86 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஊட்டி அருகே, நஞ்சநாடு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர், கோத்தகிரி அரசு மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் இருவருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தொடர்பில், இருந்தவர்களை, சுகாதாரத் துறையினர் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.கடந்த இரண்டு நாட்களுக்கு முன், தலைமையாசிரியர் ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழந்தார். இதனால், ஆசிரியர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment