தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக 450 தலைமை ஆசிரியர்கள் மற்றும் 750 பிஜி ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே இவற்றினை விரைந்து உடனடியாக நிரப்பிட ஆணை பிறப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் அறிவித்து உள்ளது.
ஆசிரியர்கள் கலந்தாய்வு :
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலினால் அது போன்ற செயல்பாடுகள் எதுவும் இன்னும், மேற்கொள்ளப்படவில்லை என்பதனால் தமிழகம் முழுவதும் 1200 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதில் பல பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாததால் பெரும் சிரமங்கள் ஏற்படுகின்றன. மேலும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளும் நடைபெற்று வருகின்றது. இதற்கும் போதுமான ஆசிரியர்கள் இல்லாததால் இந்த பணிகளும் தொய்வினை ஏற்படுத்துகிறது.
சென்னை மாநகராட்சியில் ஆகஸ்ட் மாதத்தில் கலந்தாய்வு நடைபெற்றது. எனவே இந்த பணிகளை அது போன்று விரைவில் செயல்படுத்திட வேண்டும் என தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் அறிவித்து உள்ளது.
No comments:
Post a Comment