கூடுதலான மாணவர் சேர்க்கைக்கு தேவையான வகுப்பறைகளும், ஆசிரியர்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது - அமைச்சர் செங்கோட்டையன் - Asiriyar.Net

Friday, September 11, 2020

கூடுதலான மாணவர் சேர்க்கைக்கு தேவையான வகுப்பறைகளும், ஆசிரியர்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது - அமைச்சர் செங்கோட்டையன்






ஆங்கில வழியில் கல்வி பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, கல்வி தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்த நடவடிக்கை எடுக்கப் படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் தெரிவித்தார்.


ஈரோடு மாவட்டம் நம்பியூரில் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: 



மாவட்டத்தில் தொலைதூரங்களில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில், நடமாடும் நியாயவிலைக்கடைகள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப் படும். இந்த மாதம் இறுதி வரை அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். கூடுதலான மாணவர் சேர்க்கைக்கு தேவையான வகுப்பறைகளும், ஆசிரியர்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.




கரோனா தொற்று பரவி வருவதால், அங்கன்வாடிகளில் சேர்ப்பதற்காக குழந்தைகளை பாதுகாப்போடு அழைத்து வரவேண்டிய நிலை உள்ளது. புதியகல்வி கொள்கை குறித்து தமிழக அரசின் குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் இரு மொழி கொள்கையே தொட ரும். ஆங்கில வழியில் பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, கல்வி தொலைக்காட்சி மூலம் பாடம் கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Post Top Ad