தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் 2020 21 ஆம் ஆண்டில் NCTE யினால் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட கல்லூரிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது பட்டியியலில் உள்ள கல்லூரிகளில் மாணவர்கள் எவரும் சேர வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.!
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்வியியல் கல்லூரிகளில் , தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தில் ( NCTE ) உரிய அங்கீகாரம் ( Recognition Order ) இல்லாத மற்றும் NCTE- யினால் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ள கல்வியியல் கல்லூரிகளிலும் , மேலும் , தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் இணைவு ( Affiliation ) பெறாத கல்வியியல் கல்லூரிகளில் , NCTE மற்றும் பல்கலைக்கழக விதிப்படி மாணவர் சேர்க்கை செய்ய அனுமதி இல்லை . எனவே அக்கல்லூரிகள் 2020-21 - ஆம் கல்வியாண்டிற்கு B.Ed / M.Ed / B.A.B.Ed / B.Sc.B.Ed பட்ட வகுப்புகளில் மாணவர் சேர்க்கை செய்ய கூடாது அறிவுறுத்தப்படுகிறது . அவ்வாறு விதிகளை மீறி , B.Ed / M.Ed / B.A.B.Ed / B.Sc.B.Ed பட்ட வகுப்புகளில் சேர்க்கை செய்யப்படும் மாணவர்களுக்கு , தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் எவ்வித பொறுப்பும் ஏற்காது எனத் தெரிவிக்கலாகிறது.
Click Here To Download - Approval Cancelled College List - Pdf
No comments:
Post a Comment