மத்திய அரசு ஊழியர்கள் 30 ஆண்டுகள் பணிபுரிந்தால் அல்லது வயது 50 ஐ தாண்டி விட்டால் ஓய்வில் அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக கணக்கெ டுப்பு நடக்கிறது. மத்திய அரசின் செயல்பாடுகளில் திறமை மற்றும் வேகத்தை காட்டும் வகையில் புதிய களை எடுப்பில் பணியாளர் நலத்துறை இறங்கி உள்ளது. அரசு ஊழியர்களை முன்கூட்டியே ஓய்வு பெற வைக்கும் வகையில் புதிய நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்படி புதிய பதிவேடு முறை உருவாக்கப்படுகிறது.
50 / 55 வயதை அடைகிறவர்கள் அல்லது 30 ஆண்டு கள் பணி முடித்தவர்களின் பணிப்பதிவேடுகள் ஆய்வு செய்யப்படும் . நேர்மையின்றி செயல்படுவதாக அல்லது திறமையற்று இருப்பது தெரிய வந்தால் அவர்களுக்கு பணிஓய்வு கொடுக்கப்படும். ஒவ்வொரு காலாண்டிலும் மூத்த அதிகாரி ஆய்வு செய்து , பணியில் இருந்து ஓய்வு பெறச் செய்ய பரிந்துரைப்பர் . அதன்படி அவர்களுக்கு பணி ஓய்வு உத்தரவை மத்திய அரசு பிறப்பிக்கும் . இது கட்டாய ஓய்வு அல்ல . பொது நலன் கருதி எடுக்கப்படும் முடிவு என்று பணியாளர் நலத்துறை தெரிவித்துள்ளது . இதையடுத்து 30 ஆண்டுகள் பணி முடித்தவர்கள் மற்றும் 50 வயதை தாண்டியவர்கள் பற்றி கணக்கெடுக் கும்ப ணி துவங்கி உள்ளது.
No comments:
Post a Comment