பள்ளிகள் திறப்பு குறித்து இன்று ஹெச்.எம்.,களிடம் ஆலோசனை - Asiriyar.Net

Monday, September 28, 2020

பள்ளிகள் திறப்பு குறித்து இன்று ஹெச்.எம்.,களிடம் ஆலோசனை

 




பள்ளிகளை வரும், 5ம் தேதி முதல் திறக்கலாமா என்பது குறித்து, தலைமை ஆசிரியர்களிடம், இன்று கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது.



கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுதும், பள்ளி, கல்லுாரிகள் மார்ச்சில் மூடப்பட்டன. இந்நிலையில், செப்., 21 முதல் பள்ளிகளை திறந்து, ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு வகுப்பு நடத்தலாம் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பல மாநிலங்களில் வகுப்புகள் துவங்கியுள்ளன. தமிழகத்தில், 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, அக்டோபர், 1 முதல் வகுப்புகளைநடத்த, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.


மேலும், 50 சதவீதம் ஆசிரியர்களை தினமும் பணிக்கு வரவழைத்து, வாரத்தில் ஆறு நாட்களும், பள்ளிகள் இயங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.பள்ளிகள் திறப்பு தேதியை முடிவு செய்வது தொடர்பாக, இன்று பள்ளி கல்வி செயலர் தலைமையில், சி.இ.ஓ.,க்களுடன் ஆலோசனை கூட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. பின், அந்த கூட்டம் தள்ளி வைக்கப்பட்டு, 1ம் தேதி நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அனைத்து மாவட்டங்களிலும், பள்ளிகளை திறப்பது தொடர்பாக, தலைமை ஆசிரியர்களிடம் கருத்துகளை கேட்டு, அறிக்கை தயாரிக்க, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.



எனவே, பள்ளி தலைமை ஆசிரியர்களிடம், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், இன்று கருத்துக் கேட்பு கூட்டம் நடத்துகின்றனர். அப்போது, வரும், 5ம் தேதி முதல் பள்ளிகளை திறக்கலாமா, அதற்கு உள் கட்டமைப்பு வசதிகள்சரியாக உள்ளனவா என, ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன. 


பள்ளிகள் திறப்பா? அமைச்சர் செங்கோட்டையன் பதில்! 


''தமிழகத்தில், பள்ளிகள் திறக்கப்படுமா என்ற கேள்விக்கே இடமில்லை,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.



ஈரோடு மாவட்டம், நம்பியூரில், அவர் அளித்த பேட்டி:

பத்து முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களில், பாடத்தில் சந்தேகம் உள்ளவர்கள் மட்டும், பெற்றோரின் அனுமதி கடிதம் பெற்று, அக்., 1ல் பள்ளிக்கு வர ஆணை பிறப்பிக்கப்பட்டது. தமிழகத்தில், பள்ளிகளை திறக்கப் போவதாக எந்த அறிவிப்பிலும் தெரிவிக்கவே இல்லை. அதனால், பள்ளிகள் திறக்கப்படுமா என்ற கேள்விக்கே இடமில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad