பள்ளிகளில் 30% முதல் 40% பாடத்திட்டத்தை குறைக்க நிபுணர் குழு பரிந்துரை? - Asiriyar.Net

Post Top Ad


Saturday, September 12, 2020

பள்ளிகளில் 30% முதல் 40% பாடத்திட்டத்தை குறைக்க நிபுணர் குழு பரிந்துரை? 

கற்றல், கற்பித்தல் உள்ளிட்ட பணிகளில் இருக்கும் பாதிப்பை கண்டறிய 16 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டு, நிபுணர்களின் பரிந்துரை கோரப்பட்டது.


அந்த குழுவின் முதற்கட்ட பரிந்துரை கடந்த ஜூலை மாதம் அரசிடம் சமர்பிக்கப்பட்டதைத்தொடர்ந்து, தற்போது 2ஆம் கட்ட பரிந்துரையையும் ஒப்படைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து பேசிய கல்வித்துறை அதிகாரிகள், குறுகிய காலத்தில் மொத்த பாடத்திட்டத்தை முடிக்க முடியாது என்பதால், 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை 30% பாடத்திட்டத்தை குறைக்கவும் பிற வகுப்புகளுக்கு 40% பாடத்திட்டத்தை குறைக்கவும், மாணவர்களின் அழுத்தத்தை குறைக்க திருப்புதல் தேர்வுகளை மட்டும் நடத்திக்கொள்ளலாம் என்பன உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் நிபுணர் குழு பரிந்துரையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்னர்.

Recommend For You

Post Top Ad